Published : 21 Jan 2019 01:07 PM
Last Updated : 21 Jan 2019 01:07 PM

‘தளபதி 63’ படத்தில் இவர்தான் விஜய்க்கு வில்லனா?

‘தளபதி 63’ படத்தில் வில்லனாக நடிப்பவர் யார்? என்பதைப் பற்றிய தகவல் பரவி வருகிறது.

‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்படுகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

‘மெர்சல்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே.விஷ்ணு, இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘மெர்சல்’, ‘சர்கார்’ படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரூபன் எடிட் செய்ய, கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்றுகிறார். சண்டை இயக்குநராக அனல் அரசு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க, விவேக், கதிர், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் பூஜை, பிரமாண்டமாக நேற்று (ஜனவரி 20) நடைபெற்றது. இந்தப் பூஜையில், டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ் ஆகியோரின் பெயர்கள் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், பூஜையில் அவர்கள் கலந்து கொண்டதால், அவர்களும் ‘தளபதி 63’ படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில், டேனியல் பாலாஜி வில்லனாக நடிக்கலாம் என்றொரு தகவல் பரவி வருகிறது.

‘பொல்லாதவன்’,‘வேட்டையாடு விளையாடு’ படங்களில் வில்லனாக நடித்த டேனியல் பாலாஜி, ‘பைரவா’ படத்திலும் ஏற்கெனவே விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x