Published : 14 Dec 2018 02:56 PM
Last Updated : 14 Dec 2018 02:56 PM

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா தொடக்கம் 20-ம் தேதி வரை நடக்கிறது; 150 படங்கள் திரையிடப்படும்

சென்னையில் 16-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் தூதர் ராய் கோ, தைபே கலாச்சார மைய இயக்குநர் சார்லஸ் லி, ஆஸ்திரேலிய துணை தூதர் ஆண்ட்ரூ காலிஸ்டர், இந்தோ சினி அப்ரிசியேஷன் பொதுச் செயலாளர் ஏ.தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திரைப்பட விழா கொண்டாட்டத் தின் முதல் நாளான நேற்று, கான் திரைப்பட விழாவில் ‘தங்கப் பனை’ விருது வென்ற ‘ஷாப் லிப்டர்ஸ்’ என்ற ஜப்பானிய திரைப்படம் திரையிடப்பட்டது.

இந்தோசினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் நடக்கும் இந்த திரைப்பட விழா வரும் 20-ம் தேதி வரை நடக்கிறது. இந்த 8 நாள் திரைப்பட திரையிடல் கொண்டாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 150-க்கும் அதிகமான திரைப் படங்கள் திரையிடப்படுகின்றன.

சென்னையில் தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, தாகூர் திரைப்பட மையம், ரஷ்யக் கலாச்சார மையம் ஆகிய 6 அரங்குகளில் படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்த விழாவில் சிறந்த தமிழ் படங்கள் வரிசையில் ‘96’, ‘அபியும் அனுவும்’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘ஜீனியஸ்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘இரும்புத்திரை’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மெர்குரி’, ‘பரியேறும் பெருமாள் பிஏபிஎல்’, ‘ராட்சசன்’, ‘வடசென்னை’, ‘வேலைக்காரன்’ ஆகிய 12 படங்கள் திரையிடப்படுகின்றன. சிறப்பு திரையிடலாக ‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரையிடப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x