Published : 18 Dec 2018 16:31 pm

Updated : 18 Dec 2018 16:31 pm

 

Published : 18 Dec 2018 04:31 PM
Last Updated : 18 Dec 2018 04:31 PM

சென்னை பட விழா | தேவிபாலா | டிசம்.19 | படக்குறிப்புகள்

19

காலை 10.45 மணி | A DOG'S WILL | DIR: GUEL ARRAES | BRAZIL | 2000 | 104'

லத்தீன் அமெரிக்காவில் உள்ள ஒரு மாநிலம் எல்டோரடோ. இங்கு அரசியல் அதிகாரத்துக்காக உள்ளுக்குள்ளேயே பெரும் சண்டை நடக்கிறது. இது சமூகத்தில் வெறுப்பை உருவாக்கிய நேரத்தில், உழைத்தே ஓய்ந்துபோன பத்திரிகையாளர் பாலோ மார்ட்டின்ஸ், சம அளவில் ஊழலில் ஊறிப்போன வேட்பாளர்கள் இருவரையும் எதிர்க்கிறார். பணக்காரக் கூட்டத்தின் எதிர்ப்பைச் சம்பாதிக்கும் பாலோவின் நிலை என்னவாகும்..? கேன்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் விருது பெற்ற படம்.

படத்தின் ட்ரெய்லர்

O AUTO DA COMPADECIDA

 

பகல் 1.00 மணி | SILENCE OF THE WIND / EL SILENCIO DEL VIENTO | DIR: ALVARO APONTE CENTENO | PUERTO RICO | 2017 | 85'

திருட்டுத்தனமாக Puerto Rico-வுக்கு புலம்பெயரும் மக்களுக்கு படகோட்டுபவன் ரெஃபிட்டோ. செய்வது சட்டவிரோதமான செயல் என்று தெரிந்தே செய்கிறான். டொமினிக்கன் குடியரசிலிருந்து திருட்டுத்தனமாக Puerto Rico-வுக்கு வந்து, எப்படியாவது வாழ்க்கையை சீர்படுத்திக்கொள்ள வரும் மக்கள் தான் அவனது வாடிக்கையாளார்கள். ரெஃபிட்டோவின் சகோதரி கொல்லப்பட, குடும்பத்தைக் காப்பாற்றும் கடமையும் சேர்ந்து கொள்கிறது. அதுவே அவன் செய்யும் தொழிலை விட்டு விலக முடியாததற்கு வலுவான காரணமாகிவிடுகிறது. ஒருமுறை, புலம்பெயர்வோரைக் கூட்டி வந்த படகு நொறுங்க, ரெஃபிட்டோ குற்றவாளியாகிறான். மரண தண்டனை அவனுக்காக காத்திருக்கிறது. என்ன ஆகிறான் ரெஃபிட்டோ? இருண்ட தொழில்களில் ஈடுபடும் இளைஞர்களைப் பற்றி, அவர்கள் ஏன் அதைச் செய்கிறார்கள் என்பதைப் பற்றி முன்னபிப்ராயம் இன்றி அணுக இந்தப் படம் முயல்கிறது. களம் மாறலாம். காலம் மாறலாம். காட்சிகள் மாறலாம். ஆனால், சூழ்நிலைகளால் உந்தப்பட்டு குற்றம் செய்யும் யாருமே ரெஃபிட்டோ தான். இங்கு ரெஃபிட்டோ மட்டும்தான் குற்றவாளியா? அவனை குற்றமிழைக்க வைப்பது எது? இதற்கு தீர்வு என்ன? சிறந்த படத்திற்கான விருதுகள் பெற்ற படம்.

படத்தின் ட்ரெய்லர்

El Silencio del Viento

 

பிற்பகல் 3.30 மணி | THE WIND TURNS | DIR: BETTINA OBERLI | SWITZERLAND | 2018 | 88'

பாலின், ஓர் இளம் பெண் விவசாயி. இவர் நாகரிக உலகிலிருந்து ஒதுக்குப்புறத்தில் தனது கால்நடை பண்ணையை உருவாக்கி வைத்திருக்கிறார். சுற்றுப்புறச் சூழலின் அமைதியோடு தனது கணவர் அலெக்ஸூடன் நல்ல நெறிமுறையிலான வாழ்க்கையை அப்பெண் வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் அப்பகுதியில் காற்றாலைகள் அமைக்கப்படுகின்றன. காற்றாடியை நிறுவ வருகிறார் சாமுவேல். அந்த வேளையில்தான் பாலினின் நன்மதிப்புகளும் அவள் அலெக்ஸ் மீது கொண்டுள்ள காதலும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. லோகார்னோ சர்வதேச திரைவிழாவில் விருதுபெற்ற படம்.

படத்தின் ட்ரெய்லர்

LE VENT TOURNE

 

மாலை 5.30 மணி | EVA AND CANDELA | DIR: RUTH CAUDELI | COLOMBIA | 2018 | 95'

ஈவா மற்றும் கேண்டலா. இருவரும் தோழிகளைத் தாண்டிய உறவு கொண்டவர்கள். எதனால் இருவருக்கும் ஈர்க்கப்பட்டனரோ, எதனால் இருவரும் ஒன்று சேர்ந்தனரோ அதுவே அவர்களைப் பிரிக்கிறது. அவர்களின் எதிர்காலக் கனவுகளே பிரிவுக்குக் காரணமாக மாறுகிறது. இருவரும் தவிக்கின்றனர்..

படத்தின் ட்ரெய்லர்

Eva & Candela

 

மாலை 7.30 மணி | NINA | DIR: OLAGA CHAJDAS | POLAND | 2018 | 130'

இருபது ஆண்டுகள் கடந்த பிறகும் கூட வோஜ்டெக்கை திருமணம் செய்துகொண்ட நினாவின் வாழ்க்கை மேலும் நகராமல் அப்படியே நிற்கிறது. காரணம் குழந்தையின்மை. ஒவ்வொருமுறையும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. அவர்கள் மக்டா என்ற பெண்மணியைச் சந்திக்கும்போது தங்கள் குழந்தைக்கு வாடகைத் தாயாக இருக்கும்படி கேட்கிறார்கள். மாக்டாவின் சம்மதமும் கிடைத்துவிட இப்போது நினாவின் வாழ்க்கையில் புதுவிதமான சிக்கல்கள். காரணம் இப்போது மாக்டாவின் கவர்ச்சியில் நினா விழுகிறாள்.

படத்தின் ட்ரெய்லர்

Nina

 

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author