Last Updated : 21 Dec, 2018 06:32 PM

 

Published : 21 Dec 2018 06:32 PM
Last Updated : 21 Dec 2018 06:32 PM

மாஸ் ரிலீஸுக்கு நாங்க ரெடி - ஏரியா வாரியாக விஸ்வாசம் விநியோகஸ்தர்கள் பெயர் வெளியீடு

அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம்' படத்தின் தமிழக உரிமைகள் ஏரியா வாரியாக யாருக்கு என்பதை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விஸ்வாசம்'. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழ் உரிமையை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தற்போது 'விஸ்வாசம்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பாடல்கள் வெளியாகி வரவேற்பு கிடைத்திருப்பதால், டீஸர் - ட்ரெய்லர் வெளியீட்டு பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழக உரிமையைக் கைப்பற்றியுள்ள கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஏரியா வாரியாக உரிமைகளை யார் கைப்பற்றியுள்ளனர் என்பதை தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

சென்னை - எஸ்.பி.ஐ சினிமாஸ், செங்கல்பட்டு - ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ், கோயம்புத்தூர் - வால்மார்ட் பிலிம்ஸ், திருச்சி - சத்யஜோதி பிலிம்ஸ், சேலம் - 5 ஸ்டார் செந்தில், டி.கே - ஸ்ரீ ராஜ் பிலிம்ஸ், மதுரை - சுஷ்மா சினி ஆர்ட்ஸ், வட ஆற்காடு, தென் ஆற்காடு - எஸ் பிக்சர்ஸ் ஆகியோர் கடும் போட்டிக்கு இடையே 'விஸ்வாசம்' உரிமையைக் கைப்பற்றியுள்ளனர்.

ஏரியா வாரியாக விநியோகஸ்தர்களின் பெயர்களை வெளியிட்டு "எல்லா ஏரியாலயும் மாஸ் ரிலீஸுக்கு நாங்க ரெடி! பொங்கலா அடிச்சு தூக்க நீங்க ரெடியா? 'விஸ்வாசம்' பொங்கல்" என்று தெரிவித்துள்ளது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்.

'விஸ்வாசம்' படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x