Published : 14 Dec 2018 03:35 PM
Last Updated : 14 Dec 2018 03:35 PM

சென்னை பட விழா | கேஸினோ | டிசம்.15 | படக்குறிப்புகள்

காலை 9.45 மணி | GOOD FAVOUR  | DIR: REBECCA DALY  | IRELAND | 2017 | 101'

கிறிஸ்தவ மத அடிப்படைவாதத்துடன் தங்களை பொதுச் சமூகத்திடமிருந்து விலக்கிக்கொண்டு தனிமையுடன் வாழும் கிராம மக்களிடையே நடக்கும் சம்பவங்கள் தான் இத்திரைப்படத்தின் கரு. அந்த கிராமத்தில் நடக்கும் சில அசம்பாவித சம்பவங்களுக்கிடையே, டாம் என்ற இளைஞன் யாரும் அறியாத புதிய மனிதராக எப்படியோ வந்து சேர்கிறான். நடக்கும் அசம்பாவித சம்பவங்களுக்கு அந்த இளைஞன் தீர்வாக இருப்பான் என அம்மக்கள் கருதவே, அவர்களுடன் டாம் இணைந்து வாழ்கிறான். அதனால், அம்மக்களுக்குள் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரெபேக்கா டேலி. மிக அழகான காட்சிகள், நேர்த்தியான எடிட்டிங், விழிப்புணர்வுமிக்க திரைக்கதை ஆகியவற்றால் இத்திரைப்படம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் வரவேற்பைப் பெற்றது.

படத்தின் ட்ரெய்லர்

பகல் 12.15 மணி | SARAH PLAYS A WEREWOLF | DIR: KATHARINA WIYSS | SWITZERLAND  | 2017 | 86'

ஒருநாள் 17 வயது சாரா மேடை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறாள். அப்போது அவள் அதுவரை எதிர்கொள்ளாது ஆச்சர்யத்தை எதிர்கொள்கிறாள். அந்த நொடியில் அவள் அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுகிறாள். சாராவின் புரட்சிகரமான மேடை பிரவேசத்துக்கு பின்னால் அவள் உணர்த்த விரும்பும் ரகசியம் ஒன்று இருக்கிறது. பல்வேறு திரைவிழா விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படம்.

படத்தின் ட்ரெய்லர்

பிற்பகல் 2.45 மணி | THE THIRD WIFE | DIR: ASH MAYFAIR  | VIETNAM | 2018 | 96'

19வது நூற்றாண்டில், வியட்நாமின் கிராமப்புறங்களில் நடக்கும் கதை. 14 வயது மே, பணக்கார மிராசுதாரருக்கு மூன்றாவது மனைவியாக தயாராகிறாள். அவளது உள்ளத்தில் இருக்கும் ஆசைகள் அவளை ஆட்கொள்ளும் என்பது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. அந்த ஆசைகள் அவளை சுதந்திரமான வாழ்க்கைக்கும் - பாதுகாப்பான வாழ்க்கைக்கும் இடையேயான போராட்டத்துக்கு கொண்டு செல்கின்றன. டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு வரவேற்புப் பெற்ற படம்.

படத்தின் ட்ரெய்லர்

மாலை 4.45 மணி | HARD PAINT / TINTA BRUTA | DIR: FILIPE MATZEMBACHER, MARCIO REOLON  | BRAZIL | 2018 | 118'

தன்பால்ஈர்ப்பு கொண்ட இளைஞன் ஒருவன், அவனைப்போன்றவர்களே கூடும் ''கே'' சென்டர் ஒன்றில் தன்னை வீடியோ மூலமாக காணும் ஆயிரக்கணக்கானவர்கள் முன்னாள் நடனம் ஆடி வாழ்க்கையைக் கடக்கிறான். தன் உடலில் அவன் வர்ணத்தை பூசியபடியே ஆடுவதுதான் அந்த நடனத்தின் சிறம்பம்சம். ஒரு கட்டத்தில் இதிலிருந்து வெளியே வருகிறான். படிப்பு, வேலை என எல்லாம் இடத்திலும் பாதியிலேயே துரத்தப்படுகிறான், நண்பர்களை நெருக்கமாக சேர்த்துகொள்வதற்கான தடுமாற்றமும் அவனுக்கு உண்டு. தன்பால்சேர்க்கைஎனும் கடின வண்ணத்தையும் தன் மீது பூசிக்கொண்டு சமூகத்திலிருந்து தனித்து வாழும் இளைஞனின் எண்ணத்தை உணர்வுப் பூர்வமாக கடத்தியிருக்கும் படம். இத்திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.

படத்தின் ட்ரெய்லர்

மாலை 7.00 மணி | SOFIA | DIR: MERYEM BENM BAREK ALOISI | FRANCE | 2018 | 80'

காஸாபிளாங்காவில், 20 ஆண்டுகளாக பெற்றோருடன் வசித்து வருகிறாள் சோபியா. திருமணத்துக்கு முன்பாகவே கர்ப்பம் தரித்துக்கொள்வதால் நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. திருமணம் பந்தத்திற்கு அப்பால் அவள் குழந்தை பெற்றெடுக்க விரும்பியது சட்டவிரோதமாகிறது. அதனால் மருத்துவமனையில் ஆரம்பித்து அவர் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு விறுவிறுப்பாக உருவாக்கப்பட்ட இப் படம், கேன்ஸ் திரைப்பட விழாவில் அன்சர்ட்டெய்ன் ரிக்காட் பிரிவில் சிறந்த திரைக்கதைக்காக விருதுவென்றுள்ளது. 6 விருதுகள் 9 பரிந்துரைகளைப் பெற்ற படம்.

படத்தின் ட்ரெய்லர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x