Published : 12 Dec 2018 10:50 AM
Last Updated : 12 Dec 2018 10:50 AM

என் பல ஆண்டு நண்பர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த வாழ்த்துகள்: கமல்

என் பல ஆண்டுகால நண்பர் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று கமல் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளாக மேலாக உச்ச நடிகராக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் இன்று (புதன்கிழமை) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என பலரும்  அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல், ”என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

கமலின் வாழ்த்துக்கு நடிகர் ரஜினிகாந்த், “நன்றி கமல்,  என்றென்றும், உங்கள் ரஜினி” என்று நன்றி தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x