Last Updated : 22 Dec, 2018 03:58 PM

 

Published : 22 Dec 2018 03:58 PM
Last Updated : 22 Dec 2018 03:58 PM

மீண்டும் வெற்றிமாறன் - தனுஷ் இணையும் அசுரன்

'வடசென்னை' படத்தைத் தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்துக்கு 'அசுரன்' எனத் தலைப்பிட்டுள்ளனர்.

'பொல்லாதவன்', 'ஆடுகளம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம்  'வடசென்னை'. இப்படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

'வடசென்னை' படத்தை 2 பாகங்களாகத் திட்டமிட்டார் வெற்றிமாறன். அதனை முதல் பாகத்தின் க்ளைமாக்ஸிலும் உறுதிப்படுத்தினார். ஆனால், 2-வது பாகத்துக்கு முன்னதாக, மற்றொரு கதையில் வெற்றிமாறனும், தனுஷும் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை இருவருமே உறுதி செய்தார்கள்.

தற்போது தனுஷ் இயக்கத்தில் 'மாரி 2' வெளியாகியுள்ள சூழலில், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார் தனுஷ். 'அசுரன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தாணு தயாரிக்கவுள்ளார்.

'அசுரன்' ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, "’மாரி 2’ படத்தின் வெற்றிச் செய்தி வந்து கொண்டிருக்கும் வேளையில், எனது அடுத்த படமான 'அசுரன்' அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி. வெற்றிமாறன் இயக்க, தாணு சார் தயாரிக்கிறார்" என்று தெரிவித்துள்ளார் தனுஷ்

தானே இயக்கி, நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருவதால், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'அசுரன்' படத்துக்கு தேதிகளை ஒதுக்கியுள்ளார் தனுஷ். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான படங்களிலேயே குறுகியகால படமாக 'அசுரன்' இருக்கும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x