சென்னை பட விழா | ரஷிய கலாச்சார மையம்  | டிசம்.13 | படக்குறிப்புகள்

சென்னை பட விழா | ரஷிய கலாச்சார மையம்  | டிசம்.13 | படக்குறிப்புகள்
Updated on
2 min read

காலை 10.00 மணி | MOVING PARTS  | DIR: EMILIE UPCZAK  |TRINIDAD AND TOBAGO | 2017 | 77'

சீனாவில் தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு ட்ர்னிடாடில் இருக்கும் தனது சகோதரனுடனேயே இருக்கவிரும்பி, சட்டவிரோதமாக அங்கு செல்கிறாள் ஷென்ஷென். அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் ஷென்ஷென்னுக்கு பல அச்சுறுத்தல்களை உருவாக்குகின்றன. பக்கத்து வீட்டில் இருக்கும் எவிலின், ஒரு உணவகத்தின் சமையல்காரர் இருவரால் மட்டுமே ஷென்ஷென்னுக்கு உதவ முடியும். ஷென்ஷென் நிலை என்ன ஆனது? ஒரு தேடல் கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

படத்தின் ட்ரெய்லர்

பகல் 12.00 மணி | THE RETURN / EL REGRESO | DIR: HERNAN JIMENEZ | COSTA RICA  | 2012 | 102'

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகாவிலிருந்து வந்துள்ள ஸ்பானிய மொழித் திரைப்படம். 2011 நியூயார்க் சர்வதேச லேண்டினோ திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட இயக்குநருக்கான விருது பெற்ற படம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் இருந்த ஆண்டோனியோ, சொந்த நாடான கோஸ்டா ரிகா திரும்புகிறான். அங்கே அவனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. உடைந்த குடும்பம், நோய் வாய்ப்பட்ட தந்தை, வன்முறை நிறைந்த நாடு, தொலைந்துபோன நண்பர்கள் என எல்லாமே மாறிக்கிடக்கிறது. இயல்பைத் தொலைத்து நிற்கிறான் ஆண்டானியோ.

படத்தின் ட்ரெய்லர்

பிற்பகல் 2.00 மணி | DHAPPA  | DIR: NIPUN DHARMADHIKARI  | MARATHI | 2018 | 115'

சமூகத்தில் மிகவும் மோசமான சில பிரச்சினைகளை ஒரு கண்ணாடியைப் போல நேர்மையாக பிரதிபலிக்கிறது இத்திரைப்படம். மிகப்பெரிய கலாச்சார நகரமான பூனாவில் நடந்த உண்மைக் கதையை இப்படம் பேசுகிறது. அங்கு விநாயகர் சதுர்த்தி (கணேஷ் உத்ஸவ்) விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அங்குள்ள குடியிருப்புப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் நடிக்கும் நாடகங்கள் அரங்கேறும். இந்தமுறை ''தி ட்ரீஸ் ரன் அவே'' என்ற நாடகத்தை நடத்துகிறார்கள். அதில் துக்காராம், யேசு கிறிஸ்து எனப் பலரும் வருகின்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு உருவாகிறது. சமூகத்தில் மூடி மறைத்துள்ள திரைகளை இப்படம் அகற்றுவதோடு, சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்துகிறது. இப்படத்தின் வசனங்களை கிரிஷ் குல்கர்னியும், தியூல் (2011), ஹைவே (2015) படங்களுக்கு வசனம் எழுதிய உமேஷ் குல்கர்னியும் எழுதியுள்ளனர்.

படத்தின் ட்ரெய்லர்:

மாலை 4.15 மணி | EX-SHAMAN / Ex-Pajé | DIR: LUIZ BOLOGNESI | BRAZIL  |  2018 | 95'

விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து விட்ட காலத்திலும், உலகில் பல சமூகங்கள் மூட நம்பிக்கைகளில் நம்பிக்கை கொண்டு மனிதத்தை களங்கப்படுத்திக் கொண்டிருக்கிறது. கிராமத்தின் பாதிரியார் குறிப்பிட்ட நபர் ஒருவரை நரகத்திலிருந்து வந்தவன் என்று சபிக்கிறார். பாதிரியாரால் சபிக்கப்படும் மனிதர் ஒருகாலத்தில் மதகுருவாக இருந்தவர். உள்ளூர் தேவாலயம் அவரைப்பற்றி தவறாக அவதூறு செய்வதினால் அந்த கிராம மக்களிடமிருந்து அவர் தனிமைப்படுத்தப்படுகிறார். அவரது குடும்பமும் இதன் காரணமாக பல இன்னல்களை அனுப்பவிக்கிறது. கிறித்தவ மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளை மிக அழுத்தமாகவும், அழமாகவும் கூறுகிறது ''எக்ஸ் ஷாமேன்'' டாக்குமெண்டரி.

படத்தின் ட்ரெய்லர்:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in