Published : 15 Dec 2018 07:37 PM
Last Updated : 15 Dec 2018 07:37 PM

இந்தியன் 2 அப்டேட்: வர்மக்கலைகள் கற்கும் காஜல் அகர்வால்

'இந்தியன் 2' படத்தில் நடிப்பதற்காக வர்மக்கலைகளைக் கற்று வருகிறார் காஜல் அகர்வால். 2019-ல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக சென்னையில் நடைபெற்று வருகின்றன.

இதில், காஜல் அகர்வால் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அவரும் ஹைதராபாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

'இந்தியன்' படத்தில் வர்மக்கலை தெரிந்தவராக கமல் நடித்திருந்தார். அப்படம் வெளியானபோது பலரும் ஸ்டைலாக அதனைப் பின்பற்றி வந்தார்கள். தற்போது 'இந்தியன் 2' படத்தில் காஜல் அகர்வால் கதாபாத்திரத்துக்கு வர்மக்கலைகள் தெரிந்திருக்க வேண்டும் என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இதற்காக, தற்போது வர்மக்கலைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கற்று வருகிறார் காஜல் அகர்வால். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’வுக்கான வசனங்களை எழுதியுள்ளனர். கமலுடன் காஜல் அகர்வால் நடிப்பது மட்டும் உறுதியாகியுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் பணிபுரியவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x