Published : 17 Dec 2018 08:18 AM
Last Updated : 17 Dec 2018 08:18 AM

சென்னை பட விழா | அண்ணா | டிசம்.17 | படக்குறிப்புகள்

காலை 9.30 மணி | ONE STEP BEHIND THE SERAPHIM / Un pas în urma serafimilor | DIR: DANIEL SANDU  | ROMANIA | 2017 | 150'

கிறித்தவ இறையியல் கல்லூரியில் பயிலும் வளரிளம் பருவத்தினரைப் பற்றிய படம். இறையியல் பள்ளியின் வளாகத்திற்குள் நுழையும் காப்ரியல் எனும் மாணவனின் முதல்நாள் வகுப்பை எதிர்நோக்கும் பார்வையிலிருந்து இக்கதை சொல்லப்படுகிறது. ஜனநாயக சிக்கலினால் ஏற்பட்ட பொருளாதார சவால்களை எதிர்த்து தீவிரமாகப் போராடிய ருமேனியா நாட்டின் 90களின் காலகட்டத்தில் இப்படத்தின் கதை சொல்லப்பட்டுள்ளது.

இச்சூழலில் சமுதாயத்தின் தலைவராக இருக்கக்கூடிய ஒரு பாதிரியார் மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்டுத்துவராக இருக்கிறார். அவரது பிரசங்கத்தில் கூறப்படும் மக்கள் பிறப்பு, இறப்பு, திருமணம் வழக்கமான ஒன்றைப்போலவேதான் பாதிரியாரின் சேவையும் சம்பளத்தை எதிர்நோக்கியது என்பதை காப்ரியல் உணர்கிறான்.

காப்ரியலுக்கு சில அழுத்தங்கள் காரணமாக பாடத்திட்டம் அவனுக்கு சவாலாக இருக்கிறது. தேவாலயத் தந்தை இவான் எவ்வளவுதான் நன்மை தீமை, இன்பம் துன்பம், கடவுள் என்று பேசினாலும் மாணவர்களுக்கு நல்லது செய்பவர் இல்லை என்பதை காப்ரியலும் அவனது சகாக்களும் உணர்கிறார்கள்.

பகல் 12.30 மணி | AXING / DARKOOB | DIR: BEHROUZ SHOAYBI | IRAN | 2018 | 90'

தன் குழந்தை இறந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறாள் மாஷா. ஆனால், அந்தக் குழந்தை உயிருடன் மாஷாவின் முன்னாள் கணவனிடம் வளர்வது தெரிய வருகிறது. எனவே, குழந்தையை அழைத்து வருவதற்காக செல்கிறாள். அப்போது அவளுடைய முன்னாள் கணவனையும், அவருடைய புது மனைவியையும் சந்திக்க நேர்கிறது. தீர்வின் இறுதி வடிவத்திற்குள் பல்வேறு பிரச்சினைகள் வெடிக்கின்றன. 2 விருதுகள் 8 பரிந்துரைகள் பெற்ற படம்.

பிற்பகல் 2.30 மணி | ASAKO I & II | DIR: RYUSUKE HAMAGUCHI  | JAPAN  | 2018 | 119'

இளம்பெண் ஒருவர், சுதந்திரமாக சுற்றித்திரியும் இளைஞரிடம் காதல் வயப்படுகிறாள். இருவரும் சிறிது காலத்திற்கு காதலித்து நெருக்கமாக இருக்கின்றனர். ஒருநாள் அந்த இளைஞன் அவளைவிட்டு மாயமாகி விடுகிறான். அதன்பின், அப்பெண் வேறொரு இடத்தில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, தான் ஏற்கெனவே காதலித்த இளைஞனை போன்ற தோற்றம் கொண்ட வேறொரு இளைஞனை காண்கிறாள்.

ஆனால், அந்த இளைஞன் அப்பெண் ஏற்கெனவே காதலித்த இளைஞனுடன் முற்றிலுமாக வேறுபட்ட குணநலன்களை கொண்டிருக்கிறான். அதன்பிறகு, அவர்கள் இருவரும் காதலித்தார்களா, மாயமான அந்த இளைஞன் என்ன ஆனான் என்பதை காதலும், அன்புமாக கதையை சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

மாலை 4.30 மணி | WHAT WILL PEOPLE SAY / HVA VIL FOLK SI | DIR: IRAM HAQ | NORWAY | 2017 | 106'

பூத்துக் குலுங்கும் பதினாறு வயதுப் பெண் நிஷா. பூவின் நிழலாய் அவளது இரட்டை வாழ்க்கை இருக்கிறது. வீட்டில் அவள் சமர்த்தான பாகிஸ்தான் பெண். வெளியே நண்பர்களைப் பொறுத்தவரை சாதாரண நார்வே நாட்டு இளம்பெண். ஒருமுறை நிஷா தனது ஆண் தோழமையுடன் அவளது அறையில் இருக்கையில், நிஷாவின் தந்தை பார்த்துவிடுகிறார். என்னவாகும் நிஷாவின் கதி? என்ன செய்யும் அவளின் விதி? குடும்பம், சமூகம் மற்றும் கலாச்சாரத்தின் உணர்ச்சியுள்ள ஒரு கதை. இத்திரைப்படத்திற்கு 13 விருதுகள் கிடைத்துள்ளன. 11 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

மாலை 7.15 | VISION | DIR: NAOMI KAWASE  | FRANCE | 2018 | 109'

மிகவும் அரிதான மூலிகையை தேடி ஜப்பான் செல்கிறார் ஜியானே. அவரது பயணத்தில் வனத்துறை ரேஞ்சர் டோமோவை சந்திக்கிறார். டோமா அந்த பெண்ணுக்கு உதவியாக இருக்கிறார். அவரது தேடலுக்கு உதவுகிறார். ஜப்பான் வனப்பகுதியையும், ஆச்சரியப்பட வைக்கும் உயிரினங்கள், தாவரங்களை பற்றிய புரிதலையும் விளக்குகிறது. அராட்டா டோடோவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவில், மலையின் இயற்கைக் காட்சிகள் மனம்கரைந்து ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. சான் செபாஸ்டியன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்காக பரிந்துரைப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x