Published : 14 Dec 2018 03:51 PM
Last Updated : 14 Dec 2018 03:51 PM

சென்னை பட விழா | தேவி | டிசம்.15 | படக்குறிப்புகள்

காலை 11.00 மணி | 3 FACES / SE ROKH   | DIR: JAFAR PANAHI | IRAN  | 2018 | 100'

நடிப்பின்மீது ஆர்வம்கொண்டு டெஹ்ரான் நாடகப் பள்ளியில் பயிலும் ஒரு இளம்பெண்ணை, அவருடைய குடும்பத்தினர் அழைத்துக் கொண்டுபோய் விடுகின்றனர். அந்தப் பெண் உதவி கேட்டு அழும் வீடியோவைப் பார்க்கிறார் பெஹ்னஸ் ஜஃபரி. அந்தப் பெண்ணுக்கு உதவி செய்வதற்காக, படப்பிடிப்பை நிறுத்திவிட்டு இயக்குநர் ஜாஃபர் பனாஹியுடன் கிளம்புகிறார் பெஹ்னஸ். வடமேற்கிலுள்ள கிராமத்துக்கு காரில் பயணம் செய்து, அந்த இளம்பெண்ணின் மலைக்கிராம மக்களைச் சந்தித்துப் பேசுகின்றனர். பழங்கால மரபுகள் இன்னும் கடினமாகிவிட்டன என்பதை அந்தப் பயணத்தின் மூலம் இருவரும் உணர்ந்து கொள்கின்றனர். அண்டால்யா கோல்டன் ஆரஞ்சு திரைவிழாவில் இப்படத்திற்கு சிறந்த படத்திற்கான விருதை இயக்குநர் ஜாபர் பனாஹி பெற்றுள்ளார். 4 விருதுகள் 5 பரிந்துரைகளைப் பெற்ற படம்.

படத்தின் ட்ரெய்லர்

பிற்பகல் 2.00 மணி | BINGO: THE KING OF THE MORNINGS  | DIR: DANIEL RAZENDE | BRAZIL  | 2017 | 113'

உண்மையைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை கோமாளியாக வருகிறான் அகஸ்டோ. அவனது கோமாளியுருவ முகமூடிக்கு பின் உள்ள வாழ்க்கையை இப்படம் பேசுகிறது. விரைவில் அவர் விரும்பியபடியே பெரிய நட்சத்திரமாக உருவெடுக்கிறான். இது அவனின் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது?

படத்தின் ட்ரெய்லர்

மாலை 4.30 மணி | WOMAN AT WAR  | Kona fer í stríð  | DIR: BENEDIKT ERLINGSSON | ICELAND | 2017 | 113'

55 வயதுப் பெண் ஹல்லா, ஒரு சுற்றுச்சூழல் போராளி. உள்ளூர் அலுமினிய தொழிற்சாலையை எதிர்த்து ஒற்றை ஆளாய் களத்தில் இருக்கிறார் ஹல்லா (Halla). அந்த தொழிற்சாலைக்கு எதிராக ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். தான் நேசிக்கும்  (ஐஸ்லாந்தில் இருக்கும்) மலைச்சரிவைக் காப்பாற்ற எதற்கும் தயார் எனத் துணிந்து நிற்கும் ஹல்லாவை சற்றே அசைத்துப் பார்க்கிறது ஒரு நிகழ்வு. உக்ரைன் நாட்டின் அனாதைச் சிறுமியை ஹல்லா தத்தெடுக்கிறார். அந்தச் சிறுமியின் வருகை ஹல்லாவின் லட்சியத்தை பலப்படுத்தியதா இல்லை பலவீனப்படுத்தியதா? மலை பெரிதா, தத்தெடுத்த மகள் பெரிதா? தன்னை தாயாய் நேசிக்கும் அனாதைச் சிறுமிக்கு பொறுப்பான தாயாய் இருப்பது முக்கியமா, அல்லது தான் தாயாய் நேசிக்கும் மலைச்சரிவை சுரண்டலிலிருந்து காப்பது முக்கியமா? எப்படி இரண்டையும் ஒருசேர சமன் செய்ய முடியும்? என்ன முடிவெடுக்கிறார் ஹல்லா? கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது கிடைத்தது. 7 விருதுகளும் 9 பரிந்துரைகளும் பெற்றன.

படத்தின் ட்ரெய்லர்

மாலை 7.00 மணி | TONI ERADMANN | DIR: MAREN ADE | GERMANY / AUSTRIA / MONACO |  2017 | 162'

ருமேனியாவில் வசிக்கும், தனது வேலையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இளம் பெண்ணை காண அவரது தந்தை வருகிறார். மகள் மீது தீராத பாசம் கொண்டவர். நடைமுறை யதார்த்தங்களைக் கொண்டே அவர் சிரிக்க வைப்பவர் என்றாலும் அவரது அத்தகைய செயல்கள் அவளது பணிக்கும் பயணத்துக்கும் இடையூறை ஏற்படுத்த ஜெர்மனிக்கு திரும்பிச் செல்லும்படி கூறுகிறாள். பரஸ்பரம் கோபமும், தவறான புரிதலும் தணிந்து, உடைந்த உறவு ஒட்டுவதை கூறுகிறது டோனி எராட்மேன். 29வது ஐரோப்பிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதையாசிரியர், சிறந்த இயக்குநருக்கான நான்கு விருதுகளை பெற்றதோடு சிறந்த படத்துக்கான ஐரோப்பிய பார்லிமெண்ட் லக்ஸ் விருதையும் வென்றுள்ள இப்படம்.

படத்தின் ட்ரெய்லர்

Toni Erdmann

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x