Published : 17 Dec 2018 08:17 AM
Last Updated : 17 Dec 2018 08:17 AM

சென்னை பட விழா | தாகூர் திரைப்பட மையம்| டிசம்.17 | படக்குறிப்புகள்

பிற்பகல் 2.00 மணி | HEAD - ON / GEGEN DIE WAND  | DIR: FATIH AKIN  | GERMANY | 2014 | 121'

சிபல் என்ற 22 வயது மதிக்கத்தக்க ஒரு துருக்கியப் பெண் ஜெர்மனியில் தன் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். சிபலை விட குறைந்தது 20 வயது மூத்த காஹிட் என்ற துருக்கியரும் ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார். சிபலின் குடும்பம் ஒரு மரபான, சம்பிரதாயங்கள், ஒழுக்க விதிகளைக் கடைபிடிக்கும் ஒரு குடும்பம், தந்தையும், சிபலின் சகோதரரும் சிபெல் மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இது சிபலுக்குப் பிடிக்கவில்லை, ஆகவே ஏதாவதொரு துருக்கியரை கணவனாக அடைந்து பெற்றோரின் அடக்குமுறையிலிருந்து வெளியேற எண்ணுகிறார் சிபல். ஆனால் காஹிட் ஒரு குடிகாரர். அதைப்பற்றியும் கவலைப்படாமல் காஹிட்டிடம் தன்னை மணக்குமாறு கூறுகிறார் சிபல். திருமணம் இருவரது வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒரு காதல் கதையில் துருக்கிய கலாச்சாரத்துக்குள் மூழ்கி முத்தெடுத்துள்ளார் இயக்குநர் ஃபாதி அகின். சுய அடையாளத்துக்கும் கலாச்சார கவுரவத்துக்கும் இடையேயான ஒரு உரசலா, உரையாடலா இதுதான் இந்தப் படம்.

மாலை 4.30 மணி | GOOD OLD BOYS / VIEJOS AMIGOS | DIR: FERMANDO VILLARAN LUJAN | PERU  | 2014 | 93'

வயதான மூன்று நண்பர்கள் தங்கள் சிறந்த நண்பன் ஒருவனின் மரணத்தில் நீண்ட நாட்கள் கழித்து இணைகிறார்கள். இறந்துவிட்ட அவர்களின் நண்பர் தன்னுடைய அஸ்தியை காலேவோ நகரின் அருகில் உள்ள கடலில் கரைக்க வேண்டுமென்பது விருப்பம். நண்பரின் ஆசையை நிறைவேற்ற இந்த பழைய நண்பர்கள் மேற்கொள்ளும் பயணம் வேடிக்கையான நிகழ்வுகளோடு அமைகிறது. அதில் உள்ளூர் கால்பந்து விளையாட்டுக்களில் அவர்கள் கலந்துகொண்டு செய்யும் அலப்பறை மிகவும் நகைச்சுவை மிக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x