Published : 12 Dec 2018 05:28 PM
Last Updated : 12 Dec 2018 05:28 PM

சென்னை பட விழா | தேவிபாலா | டிசம்.13 | படக்குறிப்புகள்

காலை 10.45 மணி | KOMOLA ROCKET / AN ORANGE SHIP  | DIR: NOOR IMRAN MITHU  |BANGLADESH | 2018 | 95'

வங்கதேசத்தில் கோல்னா நகரத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையைக் கூறுகிறது கோமோலா திரைப்படம். இம்மக்களின் வாழ்வதாரமாகிய நீராவி கப்பலை சுற்றித்தான் கதை நகர்கிறது. அவர்களின் தனிப்பட்ட வாழ்கையைப் பற்றி நகராமல் அடித்தட்டு மக்கள் முதல் உயர்தட்டு மக்கள்வரை எவ்வாறு இந்த நீராவி கப்பலுடன் தங்கள் வாழ்வை பிணைத்திருக்கிறார்கள் என்பதை ஆதிக், மோன்சர், மோஃபிஸ் போன்ற கதாப்பாத்திரங்கள் வழியே உணர்வுப்பூர்வமாக கூறுகிறது இப்படம். இப்படத்தின் மூலம் நீராவி கப்பல் ஒன்றின் மீது ஏறி செல்லும் அனுபவத்தை நீங்கள் பெறலாம். சஹதுஷ் சமானின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம்.

படத்தின் ட்ரெய்லர்:

பகல் 1.00 மணி | THE INSULT / L'insulte | DIR: ZIAD DOUEIRI | FRANCE  | 2017 | 113'

பெய்ரூட் நகரில் வசிக்கும் லெபனானிய கிறிஸ்தவர் டோனி. அங்கு தொழிலாளியாக வசிக்கும் பாலஸ்தீன அகதி யாசீர். ஒரு சிறு சண்டையில் யாசீர், டோனியை திட்ட அதுவே பெரிய விஷயமாக உருவெடுக்கிறது. இதனிடையே பாலஸ்தீனர்களை வெளியேற்ற வேண்டும் என்ற பிரச்சாரமும் முன்னெடுக்கப்படுகிறது. இதனால் யாசீர் தன்னை அவமதித்து விட்டதாக டோனி வழக்கு தொடுக்கிறார். லெபனானிய கிறிஸ்தவர்களை பாலஸ்தீனர்கள் அவமதித்து விட்டதாக கூறப்படும் புகார் குறித்து வெளிப்படையான விசாரணையை விவரிக்கிறது தி இன்சல்ட்.

படத்தின் ட்ரெய்லர்:

பிற்பகல் 3.30 மணி | ONE STEP BEHIND THE SERAPHIM / Un pas în urma serafimilor | DIR: DANIEL SANDU  | ROMANIA | 2017 | 150'

கிறித்தவ இறையியல் கல்லூரியில் பயிலும் வளரிளம் பருவத்தினரைப் பற்றிய படம். இறையியல் பள்ளியின் வளாகத்திற்குள் நுழையும் காப்ரியல் எனும் மாணவனின் முதல்நாள் வகுப்பை எதிர்நோக்கும் பார்வையிலிருந்து இக்கதை சொல்லப்படுகிறது. ஜனநாயக சிக்கலினால் ஏற்பட்ட பொருளாதார சவால்களை எதிர்த்து தீவிரமாகப் போராடிய ருமேனியா நாட்டின் 90களின் காலகட்டத்தில் இப்படத்தின் கதை சொல்லப்பட்டுள்ளது. இச்சூழலில் சமுதாயத்தின் தலைவராக இருக்கக்கூடிய ஒரு பாதிரியார் மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்டுத்துவராக இருக்கிறார். அவரது பிரசங்கத்தில் கூறப்படும் மக்கள் பிறப்பு, இறப்பு, திருமணம் வழக்கமான ஒன்றைப்போலவேதான் பாதிரியாரின் சேவையும் சம்பளத்தை எதிர்நோக்கியது என்பதை காப்ரியல் உணர்கிறான். காப்ரியலுக்கு சில அழுத்தங்கள் காரணமாக பாடத்திட்டம் அவனுக்கு சவாலாக இருக்கிறது. தேவாலயத் தந்தை இவான் எவ்வளவுதான் நன்மை தீமை, இன்பம் துன்பம், கடவுள் என்று பேசினாலும் மாணவர்களுக்கு நல்லது செய்பவர் இல்லை என்பதை காப்ரியலும் அவனது சகாக்களும் உணர்கிறார்கள்.

படத்தின் ட்ரெய்லர்:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x