Published : 20 Dec 2018 09:24 AM
Last Updated : 20 Dec 2018 09:24 AM

ஜீவாவின் ஜோடி

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘றெக்க’ படத்தின் இயக்குநர் ரத்தினா சிவா அடுத்து இயக்கும் புதிய படத்தில்  ஜீவாவுக்கு ஜோடியாக  தெலுங்கு நடிகை ரியா சுமன் நடிக்கிறார்.

‘‘தமிழில் முதல் படம் என்பதையும் கடந்து கதாபாத்திரத்தை நினைத்து உற்சாகமாக இருக்கிறேன். படத்தில் நாயகன் அவரைச் சுற்றி நடக்கும் சில சம்பவங்களைக் கண்டுபிடிக்க மெனெக்கெடுகிறார். அவருக்கு உதவியாக இருக்கும் கதாபாத்திரம் என்னுடையது தெலுங்கு திரைப்படங்களில்  ஏற்று நடித்த பாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறி, துடிப்பான கதாபாத்திரம் அமைந்ததே மகிழ்ச்சி. ஆரம்பத்திலேயே படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால் தமிழ் மொழியை கற்றுக் கொள்வதற்கு போதுமான நேரம் இல்லை. அதற்கு உறுதுணையாக இருக்கும் என் உதவியாளர்களுக்கு நன்றி. ஜீவாவும் அவ்வப்போது வசன உச்சரிப்பில் எனக்கு உதவியாக இருக்கிறார் “ என்றார்,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x