Last Updated : 18 Dec, 2018 12:10 PM

 

Published : 18 Dec 2018 12:10 PM
Last Updated : 18 Dec 2018 12:10 PM

கேம் ஓவர் அப்டேட்: வீடியோ கேம்ஸ் உருவாக்குபவராக தாப்ஸி

'கேம் ஓவர்' படத்தில் வீடியோ கேம்ஸ் உருவாக்குபவராக தாப்ஸி நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'மாயா'. அஸ்வின் சரவணன் இயக்கிய அப்படத்தை பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்தது. அப்படத்தைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா நடித்த 'இறவாக்காலம்' படத்தை இயக்கினார் அஸ்வின் சரவணன்.

'இறவாக்காலம்' படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டு தயாராக இருக்கிறது. ஆனால், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தங்களுக்கு இருக்கும் பண நெருக்கடியால் அப்படத்தை வெளியிடாமல் வைத்துள்ளது.

இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து சஷிகாந்த் தயாரிப்பில் 'கேம் ஓவர்' எனப் பெயரிடப்பட்ட படத்தை துவங்கினார் அஸ்வின் சரவணன். 35 நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் சரியாக திட்டமிட்டு முடித்துள்ளார். இதனால் படக்குழுவினர் இயக்குநரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

'கேம் ஓவர்' படத்தில் தாப்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் முழுக்க, வீல் சேரில் உட்கார்ந்திருப்பவராக வருகிறார் தாப்ஸி. மேலும், இதில் வீடியோ கேம்ஸ் தயாரித்து, உருவாக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இந்தியில் முன்னணி நாயகியாக வலம் வரும் தாப்ஸி, நீண்ட காலம் கழித்து தமிழில் நடித்துள்ள படம் 'கேம் ஓவர்' என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது குறித்து இயக்குநர் அஸ்வின் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

35 நாட்கள். படப்பிடிப்பு அதிகாரபூர்வமாக முடிந்தது. இந்நாள் வரை நான் சந்தித்த படப்பிடிப்புகளிலேயே இதுதான் மிகக் குறுகிய காலத்தில் முடிந்திருக்கிறது. டாப்ஸிக்கு நன்றி. அவருடைய ஆர்வத்துக்கும் பொறுமைக்கும் நன்றி. உங்களைப் போன்றோருடன் மீண்டும் மீண்டும் வேலை பார்க்க விரும்புவது ஒருவகை போதையாகவே ஆகலாம். உங்களை மேலும் பல தென்னிந்தியப் படங்களில் பார்க்க விரும்புகிறேன்.

ஒய்நாட்ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரிய நன்றி. இந்தப் பயணத்தில் என் மீதான நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் நன்றி. படத்தில் வேலை பார்த்த அனைவரும் காட்டிய உத்வேகத்துக்கும் ஆர்வத்துக்கும் நன்றி. இரவு நேர படப்பிடிப்புகளில் எனக்கு ஒத்துழைத்தமைக்கு நன்றி.

இவ்வாறு அஸ்வின் சரவணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x