Published : 20 Sep 2014 10:11 AM
Last Updated : 20 Sep 2014 10:11 AM

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நாளை நடக்கிறது

இந்த ஆண்டுக்கான இரண்டாவது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

கேந்திரிய வித்யாலயா, ஜவகர் நவோதயா பள்ளிகள் உள்பட சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளில் சேர மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (சி-டெட்) தேர்ச்சி பெற வேண்டும்.

சி-டெட் தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுதோறும் நடத்துகிறது. இந்த ஆண்டு முதலாவது சி-டெட் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 2-வது சி-டெட் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடக்கிறது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (தாள்-2) காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரையும், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (தாள்-1) பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் நடைபெறும்.

சென்னையில் முகப்பேர் டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி, அண்ணா நகர் எஸ்பிஓ மேல் நிலைப்பள்ளி உள்பட 5 மையங்களில் 3,500 பேர் சி-டெட் தேர்வு எழுத உள்ளதாக சிபிஎஸ்இ மண்டல அதிகாரி டி.டி.சுதர்சன் ராவ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x