Published : 15 Dec 2018 08:23 PM
Last Updated : 15 Dec 2018 08:23 PM

சென்னை பட விழா | தாகூர் திரைப்பட மையம் | டிசம்.16 | படக்குறிப்புகள்

பிற்பகல் 2.00 மணி | CROSSING THE BRIDGE: THE SOUND OF ISTANBUL  | DIR: FATIH AKIN  | GERMANY | 2005 | 90'

விருது வென்ற இயக்குநர் ஃபாதி அகின் இந்தத் திரைப்படத்தில் இஸ்தான்புல்லுக்கு நம்மை அழைத்து செல்கிறார். ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் நகராகும் இஸ்தான்புல். இதன் மூலம் கீழ்திசை நாடு, மேற்கத்திய நாடு ஆகியவை பற்றிய இதுகாறும் இருந்து வரும் பொதுப்பிம்பங்களுக்குச் சவால் விடுக்கிறார் இயக்குநர் ஃபாதி அகின். மரபான துருக்கிய இசை, மற்றும் ராக், ஹிப்-ஹாப் இந்தப் படத்தின் சிறப்பம்சம்.

படத்தின் ட்ரெய்லர்

Crossing The Bridge: Sound Of Istanbul

மாலை 4.30 மணி | THE SOUND STORY | DIR: PRASAD PRABHAKAR | MALAYALAM  | 2018 | 105'

ஆஸ்கர் வென்ற ரசூல் பூக்குட்டி முதன்முறையாக நாயகனாக அறிமுகமாகும் படம் ஒரு கதை சொல்லட்டுமா.

கேரளத்தில் இருக்கும் திருச்சூரில் இருக்கிறது வடக்குநாதன் கோயில். இங்கு வருடம்தோறும் நடக்கும் திரிச்சூர் பூரத் திருவிழா சிறப்பு மிகுந்தது.

வண்ணங்களாலும், ஒலிகளாலும் சந்தோஷம் கொப்பளிக்கும் கொண்டாட்டமான திருவிழா. அதை அப்படியே ஒலி வடிவில் பதிவு செய்துவிடத் துடிக்கிறான் ஓர் ஒலி வடிவமைப்பாளரான ( sound designer) இளைஞன். அது அவனது அடங்காத கனவு. தன் ஒலிக்கனவை நனவாக்க அவன் எடுக்கும் முயற்சிகளும், எதிர்கொள்ளும் சவால்களும் சினிமா ரசிகர்களுக்கான புதிய உணர்வையும் தரும். வழக்கமான கதையாய் இல்லாமல், வேறு கதைக்களனைக் கொண்டு வந்த இப்படம், ஒரு ஒலிக்கலைஞனின் வாழ்வியலை ஒலியும் ஒளியுமாய் நமக்குக் கடத்துகிறது.

படத்தின் ட்ரெய்லர்

The Sound Story

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x