

காலை 11.00 மணி | BROTHERS / BROEDERS | DIR: HANRO SMITSMAN | NETHERLANDS | 2017 | 93'
ஜோர்டானில் உள்ள அகதிகள் முகாமில் ஒரு தன்னார்வலராக தொண்டு செய்யும் யாசின் எல் அம்ரானி, சிரிய போரில் காணாமல் போகிறான். நெதர்லாந்தில் உள்ள அவனது உறவினர்கள் மிகவும் கவலையடைகின்றனர். அவனது அண்ணன்கள் ஹாசன் மற்றும் மவுராத் ஆகிய இருவரும் தம்பியை எப்படியாவது கண்டுபிடித்து மீட்டுக் கொண்டுவர வேண்டுமென்று போர்ச்சூழலுக்கே செல்கின்றனர். தம்பி எந்த வழியில் காணாமல் போனான் என்பது குறித்த சிறு துப்பும் இல்லாமல் சிறு முன் தயாரிப்புகளும் இன்றி தாரா நகரை நோக்கி அவர்களது பயணம் அமைகிறது. இத்திரைப்படம் ஐரோப்பாவிலிருந்து சிரிய போரில் பங்கேற்பவர்களைப் பற்றி சற்று கூர்ந்துநோக்கியுள்ளது. இத்திரைப்படம் டச்சு மொழியிலிருந்து சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
படத்தின் ட்ரெய்லர்:
பிற்பகல் 2.00 மணி | ETERNAL WINTER / Örök tél | DIR: Attila Szász | HUNGARY | 2018 | 110'
1944 கிறிஸ்துமஸ் பண்டிகை. சோவியத் ராணுவம் ஹங்கேரி மீது படையெடுப்பு நடத்துகிறது, அங்கு காணும் ஒவ்வொரு ஜெர்மன் இனப் பெண்களையும் இழுத்து வந்து சோவியத்தின் ''கடின உழைப்பு முகாமில்'' அடைக்கிறது. இங்கு இவர்கள் நிலக்கரிச் சுரங்கங்களில் சிறிதும் மனிதாபிமானமற்ற, ஈவு இரக்கமற்ற சூழலில் கடுமையாக பணியாற்ற வேண்டி துன்புறுத்தப்படுகின்றனர். இங்குதான் ஐரீன் சக கைதி ராஜ்மந்த் என்பவரைச் சந்திக்கிறார், இவர்தான் ஐரீனுக்கு அங்கு வாழ்வது எப்படி என்று கற்றுக் கொடுக்கிறார். ஆனால் இவருக்கோ தாயகம் திரும்பி தன் சிறு மகள் மற்றும் குடும்பத்துடன் இணைய வேண்டுமென்ற விருப்பம். ஆனால் வரலாறும் விதியும் வேறொரு திட்டம் வைத்துள்ளது. ஐரின், ராஜ்மந்த் இடையே காதல் மலர்கிறது. இது உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கதையாகும்.
படத்தின் ட்ரெய்லர்: