Published : 19 Dec 2018 03:38 PM
Last Updated : 19 Dec 2018 03:38 PM

சென்னை பட விழா | அண்ணா | டிசம்.20 | படக்குறிப்புகள்

காலை 9.30 மணி | TAZZEKA | DIR: JEAN-PHILIPPE GAUD | FRANCE | 2018 | 95'

மொராக்கோவின் ஒரு கிராமத்தில் தன் பாட்டியின் வீட்டில் வளர்கிறான் இலியாஸ். பாட்டியின் கைப்பக்குவம் அவனுக்கு பாரம்பரிய உணவை ருசியாக சமைக்கும் ரகசியம் தெரிந்த கலைஞனாக மாற்றுகிறது. வாழ்க்கை அதன் போக்கில் போய்க் கொண்டிருக்க, ஒருநாள் இளைஞர் இலியாஸ் பாரீஸைச் சேர்ந்த ஒரு சமையல் கலைஞரை சந்திக்கிறான். அவன் வாழ்வில் மாற்றம் நிகழ்கிறது. மாற்றத்துக்கு மெருகூட்டுகிறது சல்மாவின் வரவு. சல்மா - இளம் பெண். இலியாஸ் சல்மாவின் பேச்சால், செய்கைகளால் வசீகரிக்கப்படுகிறான். சல்மா மற்றும் பாரீஸ் சமையல்கலைஞரால் இலியாஸ் சொந்த கிராமத்தை விட்டு பாரீஸுக்குச் செல்கிறான். இலியாஸ் பாரீஸுக்கு சட்டத்துக்குப் புறம்பாக சென்றிருப்பதால், கடுமையான வேலையும் வறுமையும் அவனை வாட்டியெடுக்கின்றன. இருள் நடுவே ஒளிவிளக்காய் சோலிமேனின் நட்பு அவனுக்குக் கைகொடுக்கிறது. அதனால், இலியாஸ் சமைப்பதில் தனக்கு இருக்கும் காதலை, வல்லமையை மீட்டெடுக்கிறான்.

படத்தின் ட்ரெய்லர்

பகல் 12.00 மணி | WHEN YOU NO LONGER LOVE ME | DIR: IGOR LEGARRETA  | SPAIN | 2018 | 101'

வெளியூரில் நகரத்தில் பணியாற்றும் அர்ஜெண்டினிய பெண் ஒருத்தி, சொந்த ஊரான பால்கேவில் தனது தந்தை இறந்ததை கேள்விப்படுகிறாள். உடனே ஊருக்குத் திரும்புகிறாள். தந்தையின் மரணம் இயல்பானதல்ல என்ற உண்மையும் அவளுக்கு தெரியவருகிறது. தனது தந்தையைக் கொன்றவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறாள். மர்மம், த்ரில்லர் என விரியும் திரைப்படத்தில் ஒரு அழகான காதல் கதையும் உண்டு.

படத்தின் ட்ரெய்லர்

பிற்பகல் 2.30 மணி |  CLIMAX | DIR: GASPAR NOE | FRANCE |  2018 | 96'

இளம் நடனக்கலைஞர்கள் சிலர் நகரில் உள்ள ஒதுக்குப்புறமான பள்ளிக்கட்டிடத்தில் இரவு நேரத்தில் நடன ஒத்திகை நடத்துகிறார்கள். இரவு முழுவதும் பனியில் நடன ஒத்திகை மிகவும் பரபரப்பாக, உற்சாகமாக நடக்கிறது. நடன ஒத்திகை முடிந்து காலையில் வீட்டுக்கு புறப்படுகையில், எஸ்எஸ்டி எனும் போதைமருந்து கையில் கிடைக்கிறது. இதைக் குடிக்கும் நடன கலைஞர்கள் சந்திக்கும் சம்பவங்கள்தான் கதையாகும். கேன்ஸ் திரைப்பட விழாவில் 'டைரக்டர்ஸ் பார்ட்நைட்' பிரிவில் திரையிடப்பட்டது. கேன்ஸ் திரைவிழாவில் ''ஆர்ட் சினிமா விருது'' பெற்ற படம்.

படத்தின் ட்ரெய்லர்

Climax 

மாலை 4.30 மணி ------ திரையிடல் இல்லை ------

மாலை 7.15 மணி ------ திரையிடல் இல்லை ------

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x