Published : 06 Dec 2018 09:59 AM
Last Updated : 06 Dec 2018 09:59 AM

நிவேதாவின் கிறிஸ்துமஸ்!

ஜகஜால கில்லாடி,  பொன் மாணிக்கவேல் மற்றும் தெலுங்கு படங்கள் என பிஸியாக இருந்துவரும் நிவேதா பெத்துராஜ் துபாயில் உள்ள தன் குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட  புறப்பட உள்ளார். இதற்காக தற்போது நடித்துக்கொண்டிருக்கும்  படங்களுக்குக் கொடுத்துள்ள கால்ஷீட் தேதிகளை மாற்றியுள்ளார். ‘‘எனக்கு பூர்வீகம் மதுரை. இருந்தாலும் என்னோட சின்ன வயதிலேயே  குடும்பத்தினர் எல்லோரும் துபாயில் செட்டில் ஆனதால்  படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அங்கே பறந்து விடுவேன். அதுவும் இப்போது கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது விட்டுவிடுவேனா? அடுத்தடுத்து சென்னை, மைசூர்  உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள் பரபரப்பாக நகர்கின்றன. மனம் கேட்கவே இல்லை. இப்படி ஒரு சூழலுக்கு நடுவே எப்படியாவது உறவினர்களோடு சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டும் என விரும்பி படக்குழுவினரிடம் அனுமதி பெற்றேன்’’ என்கிறார் நிவேதா பெத்துராஜ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x