Published : 18 Dec 2018 04:31 PM
Last Updated : 18 Dec 2018 04:31 PM

சென்னை பட விழா | ரஷிய கலாச்சார மையம்  | டிசம்.19 | படக்குறிப்புகள்

காலை 10.00 மணி | CAPSULAS  | DIR: VERONICA RIEDEL  | GUATEMALA | 2011 | 103'

கவுத்தமாலா நாட்டின் மிகக்கடுமையான பொருளாதார எதார்த்தங்களை இத்திரைப்படம் சித்தரிக்கிறது. சட்ட விரோத நடவடிக்கைகள் வழங்கும் ஒருசிலருக்கான செல்வந்த, ஆடம்பர வாழ்க்கை ஒருபுறமும், வன்முறையும் வறுமையும், வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகள் மறுக்கப்படும் ஏழைகளின் வாழ்வு மறுபுறம். இந்த இரண்டு உலகங்களும் ஒன்று படும் இடம்தான் போதை மருந்தின் வியாபாரமயமாக்கம். போதை மருந்து, அதன் பயங்கர விளைவுகள், இதில் 12 வயது சிறுவன் ஃபான்சியின் கதைதான் கேப்சுலாஸ் என்ற இந்தத் திரைப்படம்.

படத்தின் ட்ரெய்லர்

Capsulas

பகல் 12.00 மணி | THE MOVIE OF MY LIFE | DIR: SELLON MELLO | BRAZIL | 2017 |  113'

சிலி எழுத்தாளரின் அன்டோனியோ ஸ்கார்மெட்டா எழுதிய நாவலை அடிப்படையாகக்கொண்ட படம். டோனி என்னும் இளைஞன் பிரேசிலில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு வருகிறான். தனது நாட்டுக்குத் திரும்பிச் சென்ற ஃப்ரெஞ்சுத் தந்தையைக் கண்டுபிடிக்க முயல்கிறான். பல்வேறு குழப்பங்கள் மோதல்களைக் கடந்த பிறகு தன்னையே அவன் உணரத் தொடங்குகிறான். அதன்பிறகு தனது தந்தை ஏன் சென்றார் என்பதையும் புரிந்துகொள்கிறான். இறுதியில் அவன் ஒரு ஆசிரியராக பணியை மேற்கொள்கிறான். இப்படத்தின் காட்சிகள் மிகவும் அழகானவை. பல்வேறு விருதுகளைப் பெற்ற செல்டோன் மெல்லோவின் மிகச்சிறந்த இயக்கத்தில் உருவான படம் இது.

படத்தின் ட்ரெய்லர்

O Filme da Minha Vida

மாலை 3.00 மணி | அபியும் அவனும் தமிழ்த் திரைப்படம்.

மாலை 6.00 மணி வேலைக்காரன் தமிழ்த் திரைப்படம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x