Published : 17 Dec 2018 08:28 AM
Last Updated : 17 Dec 2018 08:28 AM

சென்னை பட விழா | கேஸினோ | டிசம்.17 | படக்குறிப்புகள்

காலை 9.45 மணி | TAZZEKA | DIR: JEAN-PHILIPPE GAUD | FRANCE | 2018 | 95'

மொராக்கோவின் ஒரு கிராமத்தில் தன் பாட்டியின் வீட்டில் வளர்கிறான் இலியாஸ். பாட்டியின் கைப்பக்குவம் அவனுக்கு பாரம்பரிய உணவை ருசியாக சமைக்கும் ரகசியம் தெரிந்த கலைஞனாக மாற்றுகிறது. வாழ்க்கை அதன் போக்கில் போய்க் கொண்டிருக்க, ஒருநாள் இளைஞர் இலியாஸ் பாரீஸைச் சேர்ந்த ஒரு சமையல் கலைஞரை சந்திக்கிறான். அவன் வாழ்வில் மாற்றம் நிகழ்கிறது. மாற்றத்துக்கு மெருகூட்டுகிறது சல்மாவின் வரவு.

சல்மா - இளம் பெண். இலியாஸ் சல்மாவின் பேச்சால், செய்கைகளால் வசீகரிக்கப்படுகிறான். சல்மா மற்றும் பாரீஸ் சமையல்கலைஞரால் இலியாஸ் சொந்த கிராமத்தை விட்டு பாரீஸுக்குச் செல்கிறான். இலியாஸ் பாரீஸுக்கு சட்டத்துக்குப் புறம்பாக சென்றிருப்பதால், கடுமையான வேலையும் வறுமையும் அவனை வாட்டியெடுக்கின்றன. இருள் நடுவே ஒளிவிளக்காய் சோலிமேனின் நட்பு அவனுக்குக் கைகொடுக்கிறது. அதனால், இலியாஸ் சமைப்பதில் தனக்கு இருக்கும் காதலை, வல்லமையை மீட்டெடுக்கிறான்.

பகல் 12.15 மணி | MALCOLM | DIR: NAIDA TASS | AUSTRALIA  | 1986 | 90'

கூச்ச சுபாவம் கொண்டவர் கதையின் நாயகன். இயந்திரங்களை வைத்து மாயாஜாலம் புரிவதில் திறமையானவர். ஒரு கட்டத்தில் தனது வேலையை இழக்க தனது நண்பர்களுடன் சேர்ந்து வங்கிகளில் திருட ஆரம்பிக்கிறார். இவர்களது வாழ்க்கை எவ்வாறு நகைச்சுவை மற்றும் சுவாரசியங்களுடன் பயணிக்கிறது என்பதை கூறுகிறது மல்காம் திரைப்படம். 86ல் இத்திரைப்படத்திற்கு சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநருக்கான விருதுகளை ஆஸ்திரேலிய திரைவிழாக்களில் பெற்றுள்ளது.

பிற்பகல் 2.45 மணி | EVA AND CADELA | DIR: RUTH CAUDELI  | COLOMBIA | 2018 | 95'

உருமாற்றங்களால் ஏற்படும் அன்பைப் பற்றி பேசும் படம். ஈவா மற்றும் கேண்டலா. இருவரும் தோழிகளைத் தாண்டிய உறவு கொண்டவர்கள். எதனால் இருவருக்கும் ஈர்க்கப்பட்டனரோ, எதனால் இருவரும் ஒன்று சேர்ந்தனரோ அதுவே அவர்களைப் பிரிக்கிறது. அவர்களின் எதிர்காலக் கனவுகளே பிரிவுக்குக் காரணமாக மாறுகிறது. இருவரும் தவிக்கின்றனர்.. கொலம்பிய இளம் பெண் இயக்குநரான ரூத் சவுடேலியின் முதல் படம் இது.

மாலை 4.45 மணி | WHEN YOU NO LONGER LOVE ME | DIR: IGOR LEGARRETA  | SPAIN | 2018 | 101'

வெளியூரில் நகரத்தில் பணியாற்றும் அர்ஜெண்டினிய பெண் ஒருத்தி, சொந்த ஊரான பால்கேவில் தனது தந்தை இறந்ததை கேள்விப்படுகிறாள். உடனே ஊருக்குத் திரும்புகிறாள். தந்தையின் மரணம் இயல்பானதல்ல என்ற உண்மையும் அவளுக்கு தெரியவருகிறது. தனது தந்தையைக் கொன்றவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறாள். மர்மம், த்ரில்லர் என விரியும் திரைப்படத்தில் ஒரு அழகான காதல் கதையும் உண்டு.

மாலை 7.00 மணி | IRO / HERE | DIR: HADI MOHAGHEGH | IRAN  | 2018 | 82'

மலையில் வசிக்கும் வயதான முதியவர், தன்னுடைய மகன் சோரப்பையும், அவனுடைய வாழ்க்கையையும் காப்பாற்றப் போராடுகிறார். ஆனால், அவரால் மகன் சோரப்பின் மரண தண்டனையில் இருந்து அவனைக் காப்பாற்ற முடியவில்லை. இறந்துவிட்ட தன் மகனின் உடலை, மலை மற்றும் ஆறுகள் வழியாக எடுத்துக்கொண்டு வந்து இறுதிச்சடங்கு செய்ய வேண்டும். இதற்கிடையே, தன்னுடைய பேரனையும் அவர் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற சிரத்தை மிகுந்த வயதான மனிதரின் அன்றாடங்களை இப்படும் உணர்வுபூர்வமாக பதிவு செய்துள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட படம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x