சென்னை பட விழா | அண்ணா | டிசம்.13 | படக்குறிப்புகள்

சென்னை பட விழா | அண்ணா | டிசம்.13 | படக்குறிப்புகள்
Updated on
1 min read

காலை 9.30 மணி | AVERNO | DIR: MARCOS LOAYZA  | BOLIVIA | 2018 | 87'

இளைஞன் ஒருவன் தனது உறவினரைத் தேடிச் செல்லும்போது பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறான். நிஜ உலகுக்கு தெரியக் கூடாதென அவன் மறைந்து செயல்படும் ஒவ்வொரு இரவும், அடுத்த நாள் எப்படியாவது உயிர் பிழைத்திட வேண்டும் என்றே தொடர்கிறது. படத்தின் காட்சிகள் பெரும்பாலும் இரவிலே நகர்வதால் கதையின் பதற்றம் பார்வையாளர்களையும் தொற்றிக் கொள்ளும்படி இயக்குநர் கதையை நகர்த்தி இருக்கிறார். கலை நயம், சண்டைக் காட்சிகள் ஆகியவற்றை ரசிக்கும் பார்வையாளர்களுக்கு இப்படம் ஒரு நல்ல விருந்து.

படத்தின் ட்ரெய்லர்:

பகல் 12.00 மணி | IRO / HERE | DIR: HADI MOHAGHEGH | IRAN  | 2018 | 82'

மலையில் வசிக்கும் வயதான முதியவர், தன்னுடைய மகன் சோரப்பையும், அவனுடைய வாழ்க்கையையும் காப்பாற்றப் போராடுகிறார். ஆனால், அவரால் மகன் சோரப்பின் மரண தண்டனையில் இருந்து அவனைக் காப்பாற்ற முடியவில்லை. இறந்துவிட்ட தன் மகனின் உடலை, மலை மற்றும் ஆறுகள் வழியாக எடுத்துக்கொண்டு வந்து இறுதிச்சடங்கு செய்ய வேண்டும். இதற்கிடையே, தன்னுடைய பேரனையும் அவர் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற சிரத்தை மிகுந்த வயதான மனிதரின் அன்றாடங்களை இப்படும் உணர்வுபூர்வமாக பதிவு செய்துள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட படம்.

படத்தின் ட்ரெய்லர்:

பிற்பகல் 2.30 மணி | HATTRICK | DIR: RAMTIN LAVAFIPOUR  | IRAN | 2018 | 92'

ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு மகிழ்ச்சியாக சென்ற தம்பதிகள் அங்கிருந்து திரும்பி வரும்போது அவர்தம் குடும்ப உறவுகள் சிக்கலான நிலைக்கு மாறிவிடுகிறது. விருந்து நிகழ்ச்சியின்போதே வரும் தொலைபேசி அழைப்புகள் குறித்து ரகசியம் இருப்பது வெளிப்படுகிறது. முக்கியமாக பார்ஸாட், லிடா தம்பதியினருக்கிடையே இப்பிரச்சினை கொழுந்துவிட்டு எரிகிறது. காரில் வரும்போது அவன் ஏதேதோ விளக்கம்சொல்ல முற்பட அவளோ அவன் சொல்வதைக் கேட்கத் தயாராக இல்லை. திருமணமான முன்னாள் காதலி ஒருத்தியுடன்தான் அவன் போனில் பேசிக்கொண்டிருந்தான் என்பது அவளுக்குத் தெரியும். ஒரு உளவியல் த்ரில்லராக இப்படம் கதை சொன்ன விதத்தில் நம்மை ஈர்த்துவிடுகிறது.

படத்தின் ட்ரெய்லர்:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in