Published : 18 Dec 2018 04:31 PM
Last Updated : 18 Dec 2018 04:31 PM

சென்னை பட விழா | தாகூர் திரைப்பட மையம் | டிசம்.19 | படக்குறிப்புகள்

பிற்பகல் 2.00 மணி | THE ARTIST / EL ARTISTA  | DIR: MARIANO COHN, GASTON DUPRAT | ARGENTINA | 2008 | 100'

ஜோர்ஜ் ஒரு முதியோர் இல்ல ஊழியன். அவனது ஒரேமாதிரியான வாழ்க்கையில் ஒரு திடீர் மாற்றம். எப்போதும் இறை மனநிலையிலேயே இருக்கும் ஒரு முதியவரை சந்திக்கிறான். அவர் மிகவும் அற்புதமாக ஓவியம் தீட்டும் திறமையைப் பெற்றவர். வாய்பேச முடியாத அவரின் ஓவியங்களை  ஒரு ஆர்ட் கேலரியில் வைத்து ஜோர்ஜ் அவ்வோவியங்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறான்.. திடீரென்று ஒரு எதிர்பாராத பாதை ஒன்று உருவாகிறது. 2 விருதுகள் 7 பரிந்துரைகளைப் பெற்ற படம்.

படத்தின் ட்ரெய்லர்

மாலை 4.30 மணி | ENTANGLED THE CONFUSION / ENTREDADOS, LA CONFUSION | DIR: PRABHAKAR SHARAN | COSTA RICA  | 2018 | 95'

லியோ ஓர் அற்புதமான திருட்டுக் கலைஞன். மிகப்பெரிய கொள்ளை முயற்சியில் அவன் ஈடுபடும்போது ஆனாவைச் சந்திக்கிறான். காதல் வயப்படுகிறான்.. ஆனால் இப்போது அவனுக்கு இரண்டே தேர்வுதான், காதலா, பணமா? பணத்தை விட்டுக் கொடுத்து காதலையே தேர்ந்தெடுக்கிறான் லியோ. ஆனால் அப்போது ஏற்படும் ஒரு விபத்து அவன் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. தாதா, கொள்ளை, குத்துப்பாட்டு, காமமெடி கலாட்டா, துரத்தல், சண்டை என நம்ம ஊர் மசாலா படங்களுக்கு சளைத்ததல்ல இந்தமத்திய அமெரிக்காவைச் சேர்ந்த கோஸ்டா ரிகா நாட்டின் ஸ்பானிய மொழித் திரைப்படம்.

படத்தின் ட்ரெய்லர்

ENREDADOS LA CONFUSION

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x