Published : 18 Dec 2018 04:31 PM
Last Updated : 18 Dec 2018 04:31 PM

சென்னை பட விழா | அண்ணா | டிசம்.19 | படக்குறிப்புகள்

காலை 9.30 மணி | WE / WIJ | DIR: RENE ELLER  | NETHERLANDS | 2018 | 90'

பெல்ஜியத்தின் ஒரு எல்லையோர கிராமம். கோடைவிடுமுறையில் ஆண்களும் பெண்களுமாய் 8 இளைஞர்கள் கூடுகிறார்கள். தங்கள் சலிப்பைப் போக்க வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்புகிறார்கள். அது மகிழ்ச்சியை தரும் சாகசமாக இருக்க வேண்டுமென்பது அவர்களது விருப்பம். ஒரு கேரேவன்தான் அவர்களது கிளப்ஹவுஸ். மற்றவர்களுக்கு இடையூறு இன்றி ஊரைவிட்டு தள்ளிப்போகிறார்கள். கிட்டத்தட்ட கவர்ச்சிகரமான விளையாட்டுக்களில் மகிழ்ச்சி காண்கிறார்கள். கடைசியில், அது அவர்களை கடும் சூழல்களுக்குள் தள்ளப்பட்டு மீளவரமுடியாத நிலைக்கு தள்ளிவிடுகிறது. இத்திரைப்படம் புகழ்பெற்ற ஒரு நாவலை அடிப்படையாகக்கொண்டது.

படத்தின் ட்ரெய்லர்

பகல் 12.00 மணி | THE HARVESTERS | DIR: ETINNE KALLOS | SOUTH AFRICA | 2018 | 102'

தென் ஆப்பிரிக்காவின் பழமைவாதம் நிறைந்த தனித்துவிடப்பட்ட ஒரு பகுதியில்தான் ஹீரோ ஜானோ வசிக்கிறார். ஜானோ வித்தியாசமானவர். ரகசியங்கள் நிறைந்தவர். உணர்ச்சிவசப்படக் கூடியவர். ஒரு நாள் அவரது தாய் பீட்டர் என்ற ஆதரவற்ற தெருவோரக் குழந்தையை வீட்டுக்கு அழைத்து வருகிறார். அன்றிலிருந்து தொடங்குகிறது ஜானோ - பீட்டருக்கு இடையேயான யுத்தம். ஜானோ பதவிக்காகவும் பாரம்பரியத்துக்காகவும் பெற்றோர் பாசத்துக்காகவும் போராடுகிறார். பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட படம்.

படத்தின் ட்ரெய்லர்

The Harvesters

 

பிற்பகல் 2.30 மணி |  53 WARS | DIR: EWA BUKOWSKA  | POLAND  | 2018 | 82'

போர் தொடர்பான செய்திகளை சேகரிக்கும் ஒருவரின் மனைவி, எந்த மாதிரியான மன அழுத்தங்களுக்கும், அச்சத்திற்கும் ஆளாவார் என்பதை விளக்கும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படம். எப்போதும் பதட்டம் மிகுந்திருக்கும் போர்ச்சூழலில் இருக்கும் கணவர், அசாதாரண நேரங்களில் வீடு திரும்புவதால் ஏற்படும் மன பாதிப்புகள் திகில் காட்சிகளுடன் படமாக்கப்பட்டிருக்கிறது. தன் கணவர் போர்ச்சூழலில் கொல்லப்பட்டு விடுவாரோ என்கிற பதற்றத்திலேயே எப்போதும் இருக்கும் நாயகி நிச்சயம் நம் கவனம் ஈர்ப்பார். தன்னுடைய மன குழப்பங்களால் அவர் என்ன மாதிரியான முடிவு எடுக்கிறார் என்பதை சஸ்பென்ஸ்களுடன் படம் விவரிக்கிறது. சர்வதேச திரைவிழாக்களில் சிறந்த நடிகைக்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது.

படத்தின் ட்ரெய்லர்

மாலை 4.30 மணி | ROJO | DIR: BENJAMIN NAISHTAT | ARGENTINA | 2018 | 109'

70களில் நடக்கும் கதை. குடும்பம், நண்பர்கள் என ஒரு பிரபல வழக்கறிஞரின் வாழ்க்கை மிகச் சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. வெளியூரிலிருந்து ஒரு அந்நியன் அங்கு வருகிறான். அவன் வெளித்தோற்றத்திற்கு அமைதியானவன், துப்பறிவாளன். அவன் வந்தபிறகு வழக்கறிஞர் வாழ்க்கையில் நிறைய சிக்கல்களும் கேள்விகளும் உருவாகிறது. டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பல்வேறு திரைப்பட விழாக்களில் சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளில் விருதுகள் பெற்ற படம்.

படத்தின் ட்ரெய்லர்

Rojo

மாலை 7.15 | GIRLS OF THE SUN | DIR: EVA HUSSON  | NETHERLANDS | 2018 | 115'

குர்திஷ் யாஜிதி இனத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் ஒருவர் ஐஸ்எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி, குர்திஷ் ராணுவத்தில் சேர்கிறார். அங்கு நன்கு பயிற்சி எடுத்து, ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் தனது கிராமத்தை போரிட்டு மீட்பதுதான் கதை. கேன்ஸ் திரைவிழாவில் பாம் டி ஓர் விருது போட்டியில் பங்கேற்பதற்காக தேர்வான படம்.

படத்தின் ட்ரெய்லர்

Girls Of The Sun

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x