Published : 15 Dec 2018 15:29 pm

Updated : 15 Dec 2018 20:24 pm

 

Published : 15 Dec 2018 03:29 PM
Last Updated : 15 Dec 2018 08:24 PM

சென்னை பட விழா | தேவிபாலா | டிசம்.16 | படக்குறிப்புகள்

16

காலை 10.45 மணி | CLAIRE DARLING | DIR: JULIE BELUCELLI | FRANCE | 2018 | 90'

கதையின் நாயகி பெயர் கிளாரா டார்லிங். பிரான்ஸ் நாட்டின் வடபகுதியில் உள்ள பேஸ் பகுதியில் உள்ள வெர்டர்ஓன் கிராமத்தில் நடக்கும் கதையாகும். வெயில்காலத்தின் முதல் நாள் அன்று கதை தொடங்குகிறது. அன்றுதான் கிளாரா டார்லிங், தனது வாழ்க்கையின் கடைசிநாளை வாழ எதிர்கொள்ள உற்சாகமாக எழுகிறாள். தன்னுடைய வீட்டில் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் எந்தவிதமான மிகக் குறைந்த விலைக்கு விற்றுவிட முயல்கிறாள். டிபானி விளக்கு முதல் பென்டுலம் கடிகாரம் வரை பல அரிய பொருட்கள் அனைத்தையும் விற்கிறாள். அந்த பொருட்கள் அனைத்தும் கிளாராவின் வாழ்க்கையை அலங்கரித்தவை, இப்போது அவளின் சோகத்தை சொல்பவை. அன்றைய தினத்தில், கடந்த 20 ஆண்டுகளாக பிரிந்து சென்றிருந்த அவளது மகள் மேரி வீட்டுக்குத் திரும்புகிறாள், தனது தாய் கிளாரா டார்லிங்கை சந்திக்கிறாள். அதன்பின் வரும் காட்சிகள் வாழ்வின் புதிய பரிமாணங்களை எடுத்துக்காட்டுகின்றன.

பகல் 1.00 மணி | WE / WIJ | DIR: RENE ELLER | NETHERLANDS | 2018 | 90'

பெல்ஜியத்தின் ஒரு எல்லையோர கிராமம். கோடைவிடுமுறையில் ஆண்களும் பெண்களுமாய் 8 இளைஞர்கள் கூடுகிறார்கள். தங்கள் சலிப்பைப் போக்க வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்புகிறார்கள். அது மகிழ்ச்சியை தரும் சாகசமாக இருக்க வேண்டுமென்பது அவர்களது விருப்பம். ஒரு கேரேவன்தான் அவர்களது கிளப்ஹவுஸ். மற்றவர்களுக்கு இடையூறு இன்றி ஊரைவிட்டு தள்ளிப்போகிறார்கள். கிட்டத்தட்ட கவர்ச்சிகரமான விளையாட்டுக்களில் மகிழ்ச்சி காண்கிறார்கள். ஆனால் அது அவர்களை கடைசியில் கடும் சூழல்களுக்குள் தள்ளப்பட்டு மீளவரமுடியாத நிலைக்கு ஆளாகிறார்கள். இத்திரைப்படம் புகழ்பெற்ற ஒரு நாவலை அடிப்படையாகக்கொண்டது.

படத்தின் ட்ரெய்லர்

WIJ

பிற்பகல் 3.30 மணி | OLU | DIR: SHAJI N KARUN | MALAYALAM | 2018 | 109'

மலபாரில் இருக்கும் ஒரு கிராமம். அங்குள்ள ஏரி. அதில் இருக்கிறாள் மாயா. மாயா.. கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டவள். நீருக்கடியில் மாயாவால் பத்து பௌர்ணமிகள் வரை வாழமுடியும். அது ஒரு கரு உருவாகி இந்த உலகத்துக்கு வெளிவரும் காலம். அடுத்த ஒன்பது மாதங்களுக்கு மாயா தன் மனதில் கொண்டு காதலை அள்ளித் தரச் சொல்லி ஒரு புத்த பிட்சு அறிவுறுத்துகிறார். மாயாவின் காதலுக்கு பாத்திரமானவன், இந்த மாயக் காதலை புரிந்துகொள்வானா அல்லது பயந்து விலகிச் செல்வானா? மாயா என்ன ஆவாள்? இந்த மாயக் கதையின் முடிவு என்ன?

படத்தின் ட்ரெய்லர்

மாலை 5.30 மணி | THE SONG KEEPERS | DIR: NAINA SEN | AUSTRALIA | 2017 | 88'

ஆஸ்திரேலியாவின் டோரஸ் ஸ்ட்ரெயிட் தீவைப் சேர்ந்த தொல்குடியின பெண் பாடகர்கள் கூட்டம் ஒன்று ஜெர்மனிக்கு பயணம் செய்கிறது. அங்கு ஜெர்மானிய பழம்பாடல்களை தங்கள் பாரம்பரிய மொழியில் அவர் பாடுகின்றனர். உண்மையில் இப்பாடல்கள் அனைத்தும் அவர்கள் மூதாதையர்களுக்கு ஜெர்மனி மக்கள் அக்காலத்தில் வழங்கப்பட்டது என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். அப்பாடல்கள் அப்பழங்குடியினரின் வாழ்க்கையையும் அடையாளத்தையும் தெரியப்படுத்தும்விதமாக அமைகிறது. இசைக்களஞ்சிய தொகுப்பாக இந்த ஆவணப்படம் அமைந்துள்ளது.

படத்தின் ட்ரெய்லர்

The Song Keepers 

மாலை 7.30 மணி | 492 (A MAN CALLED DEATH) | DIR: HENRIQUE GOLDMAN | BRAZIL | 2018 | 111'

ஜூலியோ சாண்டனா என்ற மனிதனின் உண்மையான கதை இது. ஒரு அடியாளாகவே வாழ்க்கையை ஓட்டிய இந்நபர் இதுவரை 492 பேரைக் கொன்றிருக்கிறார். சுமார் 35 வருடங்கள் வெளியுலகுக்கு தன்னைப் பற்றி தெரியாமல் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சராசரியான வாழ்கையை வாழ்ந்தவர். மிக அமைதியான, அன்பான, நகைச்சுவை குணம் கொண்ட சாண்டனா எவ்வாறு இந்தக் கொலை சம்பங்களில் ஈடுபட்டார் என்பதை சுவாரசியமாக கூறுகிறது இத்திரைப்படம்.

படத்தின் ட்ரெய்லர்

O Nome Da Morte

 

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author