Published : 30 Nov 2018 02:48 PM
Last Updated : 30 Nov 2018 02:48 PM

ஏழு பேர் விடுதலை: 28 ஆண்டுகள் போதும் ஆளுநரே - விஜய் சேதுபதி, பா.இரஞ்சித், ராம் வலியுறுத்தல்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று  தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை வலியுறுத்தி வருகின்றனர்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலதாமதம் செய்யாமல் அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் ஏழு பேர் 28 ஆண்டுகள் சிறையில் இருப்பதை தமிழ்த் திரையுலக பிரபலங்கள் #28YearsEnoughGovernor என்று குறிப்பிட்டு  சமூக வலைதளங்களில் பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அவற்றில் சிலரின் பதிவுகள்

நடிகர் விஜய் சேதுபதி

”இது வெறும் தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. மனித உரிமைகளைக் கருத்தில் கொள்வதற்கான கோரிக்கை. தயவு செய்து இரக்கம் கொள்ளுங்கள் ஆளுநரே. தயவுசெய்து செயல்படுங்கள் ” என்று பதிவிட்டுள்ளார்

இயக்குநர் பா. இரஞ்சித்

”அன்புக்குரிய கவர்னரே, சிறை தண்டனை மட்டுமே தீர்வு அல்ல..  நியாயத்தின் படி செயல்படுங்கள்..” என்று பதிவிட்டுள்ளார்

இயக்குநர் ராம்

”திறக்கட்டும் கதவுகள். கவர்னரைச் சென்றடையும் வரை பதிவுகள் இடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

ஜி. வி. பிரகாஷ்

”பொறுத்தது போதும்.. அவர்களை வாழ விடுங்களை... இது அவர்களை சேரும்வரை பகிருங்கள்” என்று பதிவிட்டிருக்குறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x