Published : 10 Nov 2018 04:04 PM
Last Updated : 10 Nov 2018 04:04 PM

மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ள விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ ரிலீஸ் தேதி

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’ படம் டிசம்பர் 20-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன், மறுபடியும் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ள படம் ‘சீதக்காதி’. இந்தப் படத்தில் வயதான நாடக நடிகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அவருடைய 25-வது படம் இது.

இயக்குநர் மகேந்திரன், பார்வதி, அர்ச்சனா, காயத்ரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அத்துடன், பாரதிராஜாவும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இயக்குநராகவே கெஸ்ட் ரோலில் அவர் இந்தப் படத்தில் வருகிறார்.

ரம்யா நம்பீசனும் இந்தப் படத்தில் நடிகையாக கெஸ்ட் ரோலில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பா - மகன் என முதன்முறையாக இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இந்தப் படம், கடந்த அக்டோபர் 5-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தேதியில் (அக்டோபர் 4) ‘96’ படம் ரிலீஸானதால், இதன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

அதன்பிறகு, நவம்பர் 16-ம் தேதி ‘சீதக்காதி’ படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் ஜோதிகா நடித்துள்ள ‘காற்றின் மொழி’, விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘திமிரு புடிச்சவன்’, ‘உத்தரவு மகாராஜா’ மற்றும் ‘செய்’ ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன.

எனவே, நவம்பர் 16-ம் தேதியும் 'சீதக்காதி' ரிலீஸாகவில்லை. இந்நிலையில், டிசம்பர் 20-ம் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x