Published : 02 Nov 2018 11:41 AM
Last Updated : 02 Nov 2018 11:41 AM

மாரி 2 ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: டிசம்பரில் படம் ரிலீஸ்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாரி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, டிசம்பரில் படம் வெளியாகும் என அறிவித்திருக்கிறது படக்குழு.

பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாரி 2’. தனுஷ் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர், வினோத் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. மீண்டும் டான் ‘மாரி’யாக தனுஷ் திரும்பியிருப்பதற்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டிசம்பரில் வெளியீடு என்பதையும் போஸ்டரில் உறுதி செய்திருக்கிறது படக்குழு.

வுண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு, யுவன் இசையமைத்திருக்கிறார். ‘மாரி 2’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டு, தனது இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தத் திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ்.

இதுதவிர, பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை மையமாக வைத்து வெற்றிமாறன் இயக்க இருக்கும் புதிய படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார் தனுஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x