Published : 09 Nov 2018 07:35 PM
Last Updated : 09 Nov 2018 07:35 PM

சர்கார் விவகாரம்; தடை செய்வது ஜனநாயகத்துக்கு அவமானம்: சிபிராஜ்

முறையாக தணிக்கை செய்யப்பட்டு வெளியான ஒரு திரைப்படத்தை தடை செய்ய எவருக்கும் உரிமை கிடையாது. அவ்வாறு செய்வது ஜனநாயக முறைக்கு அவமானம் என்று சிபிராஜ் தெரிவித்துள்ளார்.

ஆளும் அரசை விமர்சிக்கும் விதமான கருத்துகள் கொண்டதால், 'சர்கார்' படம் ஆளுங்கட்சி தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.படத்துக்கு எதிரான போராட்டங்களிலும் தொண்டர்கள் சிலர் ஈடுபட்டனர்.

சர்ச்சை பெரிதாவதை உணர்ந்த சன் பிக்சர்ஸ், ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் மற்றும் காட்சிகளை படத்திலிருந்து நீக்குவதாக அறிவித்தது. அதற்கான மறு தணிக்கையும் நடந்து முடிந்துவிட்டது. ஆனால் 'சர்கார்' படத்துக்கான ஆதரவும், தமிழக அரசின் நடவடிகைகள் பற்றிய எதிர்ப்பும் வலுத்து வருகிறது.

ட்விட்டரில், பலதரப்பட்ட பிரபலங்கள், 'சர்கார்' படத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் மூத்த நடிகர்களில் ஒருவரான சத்யராஜின் மகன் சிபிராஜ், "முறையாக தணிக்கை செய்யப்பட்டு வெளியான ஒரு திரைப்படத்தை தடை செய்ய எவருக்கும் உரிமை கிடையாது. அவ்வாறு செய்வது ஜனநாயக முறைக்கு அவமானம்! #PeoplesFavSARKAR" என்று சர்காருக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x