Published : 13 Nov 2018 12:51 PM
Last Updated : 13 Nov 2018 12:51 PM

‘இந்தியன் 2’ அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் சிம்பு?

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது ‘இந்தியன் 2’ உருவாக்கத்தில் இருவருமே மும்முரமாகப் பணிபுரிந்து வருகிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கமலின் பிறந்த நாளின்போது, இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா.

‘இந்தியன் 2’ படத்துக்காக வெளிநாட்டு ஜிம் ட்ரெய்னர் உதவியுடன் உடலமைப்பை மாற்றியமைக்கும் பணியிலும் கவனம் செலுத்தி வருகிறார் கமல். டிசம்பர் மாதம் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இப்படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், படக்குழுவினர் இதுகுறித்து எந்தவொரு தகவலுமே தெரிவிக்கவில்லை. தற்போது, இதில் சிம்புவும் மிக முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

‘இந்தியன் 2’ படத்தில் சிம்பு என்றவுடன், அவரது ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகிறார்கள். இதுகுறித்து சிம்பு தரப்பில் விசாரித்தபோது, “எங்களுக்கு எதுவும் தெரியாது. இப்படியொரு விஷயம் நடந்தால் மகிழ்ச்சியே” என்று முடித்துக் கொண்டார்கள். இயக்குநர் ஷங்கர் தரப்பில் கேட்டபோது, “இன்னும் எதுவுமே முடிவாகவில்லை. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்தார்கள்.

எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’வுக்கான வசனங்களை எழுதியுள்ளனர். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் பணிபுரியவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x