Published : 31 Oct 2018 06:20 PM
Last Updated : 31 Oct 2018 06:20 PM

மூன்றாவது முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடிய எஸ்.பி.பி.

மூன்றாவது முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடியிருக்கிறார் எஸ்.பி.பி.

கார்த்தி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘தேவ்’. இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளார். கார்த்தியின் அப்பாவாக பிரகாஷ் ராஜும், ரகுலின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணனும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ‘ஸ்மைல் சேட்டை’ ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், அம்ருதா, வம்சி ஆகியோரும் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் கார்த்திக், நிக்கி கல்ராணி இருவரும் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்‌ஷ்மண் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் கார்த்தியின் பெயர், தேவ். பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவின் தீவிர ரசிகரான இவர், தன் பெயரைத் தேவ் ராமலிங்கம் என்று மாற்றிக் கொள்கிறார். பின்னாளில் அதுவே ‘தேவ்’ எனச் சுருங்கிவிடுகிறது. அதைத்தான் படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர்.

‘தேவ்’ படத்துக்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் பிரபல பின்னணிப் பாடகரான எஸ்.பி.பி. கபிலன் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார். ‘7-ம் அறிவு’ படத்தில் சூர்யாவுக்காக ஒரு பாடலைப் பாடிய எஸ்.பி.பி., தற்போது அவருடைய தம்பி கார்த்திக்காகப் பாடியுள்ளார்.

அத்துடன், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் எஸ்.பி.பி. பாடியிருப்பது இதுதான் மூன்றாவது முறை. ஏற்கெனவே ‘இரண்டாம் உலகம்’ படத்தில் ‘என் காதல் தீயே’ பாடலையும், ‘7-ம் அறிவு’ படத்தில் ‘யம்மா யம்மா காதல் பொன்னம்மா’ பாடலையும் எஸ்.பி.பி. பாடியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x