Published : 15 Oct 2018 08:47 AM
Last Updated : 15 Oct 2018 08:47 AM

நடிகைகள் கூறும் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு: நடிகர் சங்க செயலாளர் விஷால் அறிவிப்பு

சினிமா துறையில் பெண்கள் கூறும் பாலியல் புகார்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க 3 பேர் குழு அமைக்கப்படும் என்று நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறினார்.

சென்னையில் ‘சண்டக்கோழி 2’ படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், ‘மீ டூ’ இயக்கம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள் விக்கு பதில் அளித்து விஷால் கூறியதாவது:

பல துறைகளைச் சேர்ந்த பெண் களும் கடந்தகாலத்தில் பாலியல் ரீதியாக தாங்கள் சந்தித்த பிரச்சி னைகளை சமூக வலைதளங் களில் ‘மீ டூ’ இயக்கம் மூலம் தற்போது பகிர்ந்து வரு கின்றனர்.

நான் எப்போதும் பாலியல் சீண்டல்களுக்கு எதிரானவன். மீ டூ இயக்கத்துக்கு ஆதரவாக ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில்தான் கருத்து கூற வேண்டும் என்று இல்லை. பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்து என் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று இருந்தேன்.

மலேசியாவில் ஒரு நடன நிகழ்ச்சியின் ஒத்திகையின்போது அமலாபாலிடம் தவறாக பேசிய ஒருவரை பிடித்துவைத்து, பின்னர் என்னை தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு பேசினார். நானும் கார்த்தியும் உடனே அவரை கைது செய்ய இங்கிருந்தே எல்லா ஏற்பாடுகளையும் செய்தோம்.

பிரச்சினை நடந்துவிட்டது என்று புகார் அளிக்க இது காவல் நிலையம் அல்ல. எனவே, இதுபோன்ற விஷயங்கள் நடப் பதற்கு முன்னரே, எங்களை தொடர்புகொண்டு புகார் கூறினால், நடவடிக்கை எடுப்போம்.

திரைப்படத் துறையைச் சேர்ந்த பெண்கள் கூறும் பாலியல் புகார்களை விசாரிக்க மற்றும் அதைத் தடுக்க தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.

இவ்வாறு விஷால் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x