Published : 23 Oct 2018 03:23 PM
Last Updated : 23 Oct 2018 03:23 PM

மாரி செல்வராஜின் மிகச்சிறந்த உழைப்பு ‘பரியேறும் பெருமாள்’: இயக்குநர் ஷங்கர் பாராட்டு

மாரி செல்வராஜின் மிகச்சிறந்த உழைப்பு ‘பரியேறும் பெருமாள்’ படம் என இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமான படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்தது. கதிர் - ஆனந்தி பிரதான கதாபாத்திரங்களில் நடித்தனர். யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.

சாதிப் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான சினிமாவாக இது கொண்டாடப்படுகிறது. சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களையும் இந்தப் படம் எழுப்பியுள்ளது.

இந்நிலையில், ‘பரியேறும் பெருமாள்’ படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர், அந்தப் படத்தைப் பாராட்டியுள்ளார். “பரியேறும் பெருமாள், சினிமாவில் ஒரு இலக்கியம் போல இருந்தது. ஆழமாக, பாதிக்கும்படி இருந்தது. யோசிக்க வைத்தது.

அந்தக் கொலைகாரர் கதாபாத்திரம் பயங்கரமாக இருந்தது. ஜோ கதாபாத்திரம் தேவையான இடங்களில் இதம் தரும் மென்மையான அம்சமாக இருந்தது. இயக்குநர் மாரி செல்வராஜின் மிகச்சிறந்த உழைப்பு” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஷங்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x