Published : 15 Oct 2018 07:10 PM
Last Updated : 15 Oct 2018 07:10 PM

தயாரிப்பாளர்கள் சங்கம் ஒதுக்கிவைத்த 10 தியேட்டர்கள்

பைரசிக்கு உறுதுணையாக இருந்த 10 தியேட்டர்களைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒதுக்கி வைத்துள்ளது.

இப்போதெல்லாம் தமிழ்த் திரைப்படங்கள், ரிலீஸான அன்றே ஆன்லைனில் கிடைத்துவிடுகின்றன. மறுநாளே சுடச்சுட டிவிடியாக வந்துவிடுகிறது. இப்படி பைரசி மூலம் மக்கள் படம் பார்ப்பதால், தமிழ் சினிமாவின் வியாபாரம் என்பது மிகக் குறைவாகவே உள்ளது.

எனவே, இவற்றைத் தடுக்கும் வகையில் பல விஷயங்களைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கொண்டு வருகிறது. அதில், தியேட்டர்களில் இருந்துதான் திருட்டுத்தனமாகப் படம்பிடிக்கப்பட்டு பைரசிகள் உருவாகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அப்படி ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட 10 தியேட்டர்களின் பட்டியலை தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. அந்தத் தியேட்டர்களின் என்னென்ன படங்கள் திருட்டுத்தனமாகப் படம்பிடிக்கப்பட்டன என்ற தகவலும் அதில் உள்ளது. அவை:

1. முருகன், கிருஷ்ணகிரி (மனுசனா நீ)

2. நயன்தாரா, கிருஷ்ணகிரி (கோலிசோடா 2)

3. கோமதி, மயிலாடுதுறை (ஒரு குப்பைக்கதை)

4. எல்லோரா, கரூர் (ஒரு குப்பைக்கதை)

5. பத்மாவதி, ஆரணி சேத்துப்பட்டு (மிஸ்டர் சந்திரமெளலி)

6. கவிதாலயா, கரூர் (தொட்ரா)

7. கவிதாலயா, கரூர் (ராஜா ரங்குஸ்கி)

8. சத்யம், பெங்களூரு (இமைக்கா நொடிகள்)

9. ஜெய் சாய் கிருஷ்ணா, விருத்தாச்சலம் (சீமராஜா)

10. சினிபொலிஸ், மங்களூர் (சீமராஜா)

மேற்கண்ட தியேட்டர்களுக்கு எந்தவிதமான ஒத்துழைப்பையும் வழங்குவதில்லை எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்து, க்யூப் நிறுவனத்துக்கும் இதைத் தெரிவித்துள்ளது.

மேலும், வருகிற வாரம் ரிலீஸாகும் படங்களின் தயாரிப்பாளர்களும், தங்கள் படங்களை மேற்கண்ட தியேட்டர்களில் திரையிடக்கூடாது என க்யூப் நிறுவனத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர். இதையே அடுத்தடுத்து ரிலீஸாகும் படங்களின் தயாரிப்பாளர்களும் செய்ய வேண்டும் எனத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x