Published : 03 Oct 2018 09:22 AM
Last Updated : 03 Oct 2018 09:22 AM

இமான் – ஸ்ரேயா கோஷல் கூட்டணிக்கு வரவேற்பு

அஜீத் நடிக்கும் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், அதில் இடம்பெறும் 2 முக்கிய பாடல்களின் பதிவை முடித்திருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான்.  மும்பையில் பதிவான அந்த பாடல்களில் ஒன்றை ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். இவர் இமான் இசை யில் தொடர்ந்து பாடி வருகிறார். ‘விசுவாசம்’ படத்தை தொடர்ந்து ஏ.சி.முகில் இயக்க பிரபுதேவா நடிப்பில் டி.இமான் இசையமைக்கும்  ‘பொன் மாணிக்கவேல்’ படத்துக்காக, ‘உதிரா உதிரா வினவல் கோடி என்னில்’ என்ற பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இந்த பாடலை சூப்பர் சிங்கர் போட்டியாளரான பாடகர் ஸ்ரீகாந்த்துடன் இணைந்து பாடியுள்ளார் ஸ்ரேயா கோஷல். தமிழைத் தொடர்ந்து, கன்னடம், தெலுங்கிலும் இமான் - ஸ்ரேயா கோஷல் கூட்டணி, வெற்றிக் கூட்டணி என்று பெயரெடுத்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x