Published : 09 Oct 2018 05:07 PM
Last Updated : 09 Oct 2018 05:07 PM

இரட்டை வேடங்களில் நயன்தாரா நடிக்கும் ‘ஐரா’

நயன்தாராவின் 63-வது படத்துக்கு ‘ஐரா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

‘லட்சுமி’, ‘மா’ குறும்படங்களின் மூலம் புகழ் பெற்றவர் கே.எம்.சர்ஜுன். இவர் இயக்குநராக அறிமுகமான படம் ‘எச்சரிக்கை: இது மனிதர்கள் நடமாடும் இடம்’. கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், சத்யராஜ், கிஷோர், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, நயன்தாராவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் கே.எம்.சர்ஜுன். பிரதான வேடத்தில் நயன்தாரா நடிக்கும் இந்தப் படத்தில், கலையரசன் மற்றும் யோகி பாபு இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சென்னை மற்றும் பொள்ளாச்சியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சென்னையில் மிகப்பெரிய பேய் பங்களா செட் அமைத்துப் படமாக்கியுள்ளனர். ‘அறம்’ படத்தைத் தயாரித்த கோட்டபாடி ஜே ராஜேஷ், கேஜேஆர் ஸ்டுடியோஸ் மூலம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இன்று (அக்டோபர் 9) மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது. படத்துக்கு ‘ஐரா’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் நயன். இரண்டு வேடங்களில் முதன்முறையாக அவர் நடிக்கும் படம் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x