Published : 18 Oct 2018 11:00 AM
Last Updated : 18 Oct 2018 11:00 AM

ட்விட்டர் சண்டை!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ’தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் படமாக இயக்குகிறார் ப்ரியதர்ஷினி. இப்படத்தை அவர் அறிவித்தபோது, அதை நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் ’இது ஒரு தலைபட்சமானது’ என்று விமர்சித்திருந்தார். இந்நிலையில் கமல் தேவர்மகன் 2 படத்தை உறுதி செய்திருக்கிறார்.

இதை சுட்டிக்காட்டிய  ப்ரியதர்ஷினி, தனது ட்விட்டர் பக்கத்தில், "தி அயர்ன் லேடி திரைப்படத்தை பயஸ்ட் என்று விமர்சித்த கமல்ஹாசன் அவர்களுக்கு, மக்கள் எழுச்சி என்பார், மாணவர் புரட்சி என்பார், ஊர் கூடி தேர் இழுப்போம் என்பார்... இவர் தம் நோக்கம் அறியா மக்களை மய்யமாக கொண்டும், பல ஆண்டுகளுக்கு பின்பாக புரட்சியை எல்லாம் தள்ளிவிட்டு ஓட்டு வங்கிக்காகவும், சுயநலத்தோடும் ’தேவர்மகன் 2’ எடுத்துக் கொண்டாட இருக்கிறார் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வாரா? உண்மைபோல் தோற்றம் அளிக்கும் வேஷம் போடும் மனிதர்களை நிந்தை செய்" எனத் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x