Last Updated : 19 Aug, 2014 05:14 PM

 

Published : 19 Aug 2014 05:14 PM
Last Updated : 19 Aug 2014 05:14 PM

காஷ்மோரா: இரட்டை வேடத்தில் கார்த்தி

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குநர் கோகுல் இயக்கவிருக்கும் 'காஷ்மோரா' படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார் கார்த்தி

'அட்டகத்தி' இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் 'மெட்ராஸ்' படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாக இருந்த இப்படம் தற்போது செப்டம்பர் வெளியீடாக வரவிருக்கிறது.

'மெட்ராஸ்' படத்தைத் தொடர்ந்து 'கொம்பன்' படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. லட்சுமிமேனன் நாயகியாக நடித்து வரும் இப்படத்தை 'குட்டிப்புலி' இயக்குநர் முத்தையா இயக்கி வருகிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குநர் கோகுல் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் கார்த்தி. இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பை 'கொம்பன்' முடிந்தவுடன் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

கார்த்திக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனையும், நகைச்சுவைப் பகுதிக்கு வடிவேலுவையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. ஆனால், இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x