Published : 08 Oct 2018 08:24 PM
Last Updated : 08 Oct 2018 08:24 PM

‘96’ ஜானு குறித்து த்ரிஷா ட்வீட்

‘96’ படத்தில் ஜானுவாக நடித்த த்ரிஷாவுக்கு, பல இடங்களில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

சி.பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கும் படம் ‘96’. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ராமச்சந்திரன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், ஜானகி தேவி கதாபாத்திரத்தில் த்ரிஷாவும் நடித்துள்ளனர்.

பள்ளிக்கால காதலைப் பற்றிய இந்தப் படம், பலருக்கும் தங்கள் பள்ளி வாழ்வு பற்றிய நினைவுகளைக் கிளறிவிட்டுள்ளது. எனவே, சமூக வலைதளங்களில் ஆளாளுக்குத் தங்கள் பள்ளிக்காதல் பற்றி பதிவிட்டு வருகின்றனர். அத்துடன், படத்தில் நடித்தவர்களுக்குப் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

“அற்புதமான பின்னூட்டங்களுக்கு நன்றி. அன்பான வாழ்த்துகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ‘96’ படத்தில் ஜானு கதாபாத்திரம் உங்கள் அனைவருக்கும் பிடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்தப் படம் ஒரு அணியின் உழைப்பு.

காதலின் பெயரால் நாங்கள் உணர்ந்த சின்னச் சின்ன மாயத்தை எல்லாம் இந்தப் படத்தில் நாங்கள் அனைவரும் சேர்த்திருக்கிறோம்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் த்ரிஷா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x