Published : 18 Aug 2018 05:45 PM
Last Updated : 18 Aug 2018 05:45 PM

பாபி சிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்

‘அக்னி தேவ்’ படத்தில் பாபி சிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சரத்குமார் நடிப்பில் ‘சென்னையில் ஒருநாள் 2’ படத்தை இயக்கிய ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குநர் சாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கும் படம் ‘அக்னி தேவ்’. சியாண்டோ ஸ்டுடியோ மற்றும் ஜெய் ஃபிலிம்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.

பாபி சிம்ஹா, மதுபாலா, சதீஷ் நடிக்கும் இந்தப் படத்தில், ரம்யா நம்பீசனும் இணைந்துள்ளார். பாபி சிம்ஹா ஜோடியாக நடிக்கிறார் ரம்யா நம்பீசன் என படக்குழு அறிவித்துள்ளது.

பாபி சிம்ஹா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவராக அவர் நடிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது. அவர் தங்கியிருக்கும் ஹாஸ்டலில் தான் வார்டனாக ரஜினி வேலை பார்ப்பதாகக் கதை அமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x