அனுமனை அவமதிப்பதா? - இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் போலீசில் புகார்

அனுமனை அவமதிப்பதா? - இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் போலீசில் புகார்
Updated on
1 min read

அனுமனை அவமதிக்கும் வகையில் பேசியதாக இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் ‘வாரணாசி’. இந்​தப் படத்​துக்​காக ‘குளோப் டிரோட்​டர்’ என்ற சாகச உலகத்​தைப் படக்​குழு உருவாக்​கி​யுள்​ளது. இதற்​கான விழாவை ஹைதரா​பாத்​தில் கடந்த நவ.15 அன்று ஏற்பாடு செய்தது படக்குழு. இந்த நிகழ்வில் படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு வெளியிட்டது.

இந்த நிகழ்வில் பேசிய ராஜமவுலி “எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. என் அப்பா அனுமன் நமக்கு பின்னால் இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்வார் என்றார். அவர் இப்படித்தான் கவனித்துக்கொள்கிறாரா - இதை நினைத்து எனக்கு கோபம் வருகிறது. என் மனைவிக்கும் அனுமன் மீது அன்பு உண்டு. அவர் ஒரு நண்பரைப் போல அவருடன் உரையாடுகிறார். எனக்கும் அவர் மீது கோபம் வருகிறது. என் அப்பா அனுமனைப் பற்றிப் பேசி, படத்தின் வெற்றிக்கு அனுமனின் ஆசீர்வாதங்களை நம்பியிருக்கச் சொன்னபோது, ​​எனக்கு மிகவும் கோபம் வந்தது” இவ்வாறு ராஜமவுலி பேசினார்.

அந்த நிகழ்வில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களை குறிப்பிட்டு அவர் இவ்வாறு பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் ராஜமவுலி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராஷ்ட்ரியா வானரசேனா, கவுரக்‌ஷக் சங்கம் உள்ளிட்ட இந்து அமைப்பினர் ஹைதராபாத்தின் சரூர் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அந்த புகாரில் வெறுப்பை தூண்டும் நோக்கி வேண்டுமென்றே இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் ராஜமவுலி பேசியதாக கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in