திட்டமிட்டப்படி வெளியாகுமா ‘வா வாத்தியார்’?

திட்டமிட்டப்படி வெளியாகுமா ‘வா வாத்தியார்’?
Updated on
1 min read

டிச.5-ம் தேதி திட்டமிட்டப்படி ‘வா வாத்தியார்’ வெளியாகுமா என்ற கேள்வி திரையுலகினர் மத்தியில் எழுந்திருக்கிறது.

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வா வாத்தியார்’. இப்படம் நீண்ட மாதங்களாக தயாரிப்பில் இருக்கிறது. இறுதியாக டிசம்பர் 5-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி 8 நாட்கள் படப்பிடிப்பு தற்போது தான் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் அடுத்த பாடல், டீசர், ட்ரெய்லர் உள்ளிட்டவை எப்போது என்ற தகவலே இல்லாமல் இருக்கிறது. இதனால் டிசம்பர் 5-ம் தேதி ‘வா வாத்தியார்’ வெளியாகுமா என்ற கேள்வி விநியோகஸ்தர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இறுதிகட்டப் பணிகள் முடிவடைந்து டிசம்பர் 5-ம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என்கிறார்கள் திரையுலகில்.

டிசம்பர் 5-ம் தேதியினை விட்டால், அதே மாதத்திற்குள் வேறொரு நாளில் இப்படத்தினை வெளியிட்டு ஆக வேண்டிய சூழலுக்கு தயாரிப்பு நிறுவனம் தள்ளப்பட்டு இருக்கிறது. டிசம்பரில் வெளியானால் மட்டுமே ‘வா வாத்தியார்’ படத்தின் ஓடிடி உரிமையினைப் பெற்றுக் கொள்வோம், இல்லையென்றால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என அமேசான் ப்ரைம் நிறுவனம் கூறியிருக்கிறது. இதனால் எப்படியாவது இப்படத்தினை வெளியிட்டு விட வேண்டும் என்ற முனைப்பில் இறங்கியிருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in