

ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடர், ஹரிஹரன் ராம் இயக்கிய ‘ஜோ’, சீனு ராமசாமி இயக்கிய ‘கோழிப்பண்னை செல்லதுரை’ ஆகிய திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் ஏகன்.
இவர் அடுத்து நடிக்கும் படத்தை யுவராஜ் சின்னசாமி இயக்குகிறார். இதை விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிக்கின்றனர். தெலுங்கு நடிகை ஸ்ரீதேவி, மலையாள நடிகை ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கின்றன.