

’லப்பர் பந்து’ படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் நடிகர்கள் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லப்பர் பந்து’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டி இருந்தார்கள். இதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தமிழரசன் பச்சமுத்து.
இப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார் ஷாரூக்கான். தற்போது இதன் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. முன்னணி இயக்குநர் ஐ.வி சசியின் மகன் அனி ஐ.வி சசி இயக்கி வருகிறார். இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவுமே வெளியிடப்படவில்லை.
இதில் தினேஷ் கதாபாத்திரத்தில் ராஜசேகர், ஸ்வாசிகா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரத்தில் ராஜசேகரின் மகள் ஷிவாத்மிகா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதில் ஹரிஷ் கல்யாண் கதாபாத்திரத்தில் யார் நடிக்கவுள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை.