Published : 01 Aug 2018 10:37 AM
Last Updated : 01 Aug 2018 10:37 AM

பேய் பங்களாவில் நயன்

அஜித் நடிப்பில் ‘விசுவாசம்’, சிவகார்த்தி கேயன் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படம், இதைத் தவிர தெலுங்கில் சிரஞ்சீவி படம் என கால்ஷீட்டை பிஸியாக வைத்திருக்கிறார் நயன்தாரா. இதற்கிடையில், சிறு இடைவெளி கிடைத்தாலும் ‘அறம்’, ‘கோலமாவு கோகிலா’ பாணியில் நாயகிக்கான கதைகள் கேட்பதிலும் மிகுந்த ஆர்வம் செலுத்திவருகிறார். அந்த வரிசையில் ‘மா’, ‘லஷ்மி’ குறும்படங்களின் இயக்குநர் சர்ஜுன் எடுத்துவரும் பேய் படமும் தனக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்திருப்பதாகவே நெருங்கிய நண்பர்களிடம் கூறி வருகிறார் நயன்தாரா. தற்போது அந்த படத்துக்காக சென்னையில் பிரம்மாண்ட பேய் பங்களா செட் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்த பேய் பங்களாவில் செப்டம்பர் முதல் வாரம் தொடங்க உள்ள படப்பிடிப்புக்காக தயாராகி வருகிறார் நயன்தாரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x