துல்கர் சல்மான் உண்மையான ‘நடிப்பு சக்கரவர்த்தி’ - வியக்கிறார் பாக்யஸ்ரீ போர்சே

துல்கர் சல்மான் உண்மையான ‘நடிப்பு சக்கரவர்த்தி’ - வியக்கிறார் பாக்யஸ்ரீ போர்சே
Updated on
1 min read

துல்கர் சல்மானின் ‘காந்தா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார், பாக்யஸ்ரீ போர்சே. மீடியா மற்றும் வேஃபரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், ராணா, சமுத்திரக்கனி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மானை, உண்மையான நடிப்பு சக்கரவர்த்தி என்று பாக்யஸ்ரீ போர்சே பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “என் மீது நம்பிக்கை வைத்து, என்னைப் போன்ற ஒரு புதுமுகத்துக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு இயக்குநர் செல்வமணி செல்வராஜுக்கு நன்றி. அவர்தான் எனது முதல் ஆசிரியர், இயக்குநர். நடிகர் ராணா இந்​தப் படத்​தின் முதல் நாளி​லிருந்தே எனக்கு ஆதரவளித்து வரு​கிறார். ஒரு நடிக​ராக இந்​தப் பயணத்​தில் அவரை எனது வழி​காட்​டி​யாகக் கொண்​டிருப்​பது அதிர்​ஷ்டம். அவர் ஆதர​வும் நிலை​யான வழி​காட்​டு​தலும் இல்​லாமல், என்​னால் சிறப்​பாக நடித்​திருக்க முடி​யாது.

என் சக நடிகர் துல்​கர் சல்​மான், உண்​மை​யான ‘நடிப்பு சக்​கர​வர்த்​தி’. அவருடன் நடித்​தது மகிழ்ச்​சியாக இருந்​தது. ஒவ்​வொரு பிரேமிலும் பிர​காசித்​திருக்​கிறார். ஒரு நடிக​ராக எங்​களுக்​கெல்​லாம் அவர் உத்​வேகம். இது​வரை ஒரு கமர்​சி​யல் நடிகை என்றே அழைக்​கப்​பட்​டிருக்​கிறேன். இந்​தப் படத்​துக்​குப் பிறகு சிறந்த நடிகை என்று என்​னைச் சொல்​வார்​கள்” என்று தெரி​வித்​துள்​ளார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in