மனோதத்துவ த்ரில்லர் கதையில் அனுராக் காஷ்யப், சங்கீதா

மனோதத்துவ த்ரில்லர் கதையில் அனுராக் காஷ்யப், சங்கீதா
Updated on
1 min read

ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக அறிமுகமான ‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’, அதர்வா நடித்த ‘100’ உள்பட சில படங்களை இயக்கியவர் சாம் ஆண்டன். இவர் அடுத்து இயக்கும் படம் ‘அன்கில்_123’.

மனோதத்துவ த்ரில்லர் படமான இதில் அனுராக் கஷ்யப் முக்கிய கதாபாத்திரத்திலும் சங்கீதா உணர்ச்சிகரமான கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைக்கும் இப்படத்துக்குக் கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

“இந்தப் படம், ஒரு சமூக ஊடக இன்ஃப்ளூயன்சரின் வாழ்க்கை எவ்வாறு மனநிலை மாற்றத்துக்கும் அழிவுக்கும் வழிவகுக்கிறது என்பதைக் கூறுகிறது. புகழின் அழுத்தம், தனிமை, மற்றும் அடையாள இழப்பு ஆகியவை எவ்வாறு ஒருவரின் உண்மையான உலகத்தைப் பாதிக்கிறது என்பதை படம் வெளிப்படுத்தும். இன்றைய டிஜிட்டல் உலகில் ஒவ்வொரு பதிவுக்கும் பின்னால் மறைந்திருக்கும் உணர்ச்சிப் போராட்டங்களையும் ஒப்பீடு, பொறாமை, மற்றும் தன்னம்பிக்கை குறைதல் ஆகியவற்றின் மோதல் களையும் இந்த படம் உண்மையாகச் சித்தரிக்கிறது” என்கிறது படக்குழு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in