

முனீஷ்காந்த் நடித்துள்ள ‘மிடில் கிளாஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
நகைச்சுவை நடிகர் முனீஷ்காந்த், ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மிடில் கிளாஸ்’. கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இதில், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நவ.21-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - மிடில் கிளாஸ் பின்னணி கொண்ட கதைக்களத்துடன் வரும் படங்களுக்கு ஆடியன்ஸ் மத்தியில் எப்போதும் வரவேற்பு உண்டு. திரையில் வரும் கதாபாத்திரங்கள் படும் இன்னல்களுடன் பார்வையாளர்கள் தங்களை கனெக்ட் செய்து கொள்வதால் அதுபோன்ற படங்களின் வெற்றி சாத்தியமாகிறது. இதற்கு உதாரணமாக வி.சேகர் படங்கள் தொடங்கி சமீபத்திய ‘குடும்பஸ்தன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வரை சொல்லலாம். அந்த வரிசையில் இந்த படமும் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் ட்ரெய்லரில் தெரிகிறது. முனீஷ்காந்த் காமெடி மட்டுமின்றி குணச்சித்திர நடிப்பில் கலக்கக் கூடிய நடிகர், அவர் இந்த படத்தில் சரியாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. நகைச்சுவை, சென்டிமெண்ட் சரியான விகிதத்தில் கலந்து சீரான திரைக்கதையும் அமைந்து விட்டால் வெற்றி உறுதி. ’மிடில் கிளாஸ்’ ட்ரெய்லர் வீடியோ: