‘சிக்மா’ - ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் தலைப்பு 

‘சிக்மா’ - ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் தலைப்பு 
Updated on
1 min read

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்‌ஷன் அட்வென்சர் காமெடி திரைப்படமான இதற்கு ‘சிக்மா’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இதில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்பட பன்மொழியில் உருவாகும் இப்படம் பற்றி ஜேசன் சஞ்சய் கூறும்போது, “பயமில்லாத, சுதந்திரமான, சமூகத்தால் முழுமையாக புரிந்து கொள்ளபடாத ஒருவன் தன் இலக்குகளை நோக்கி நகர்வதை இந்தப் படம் பேசும். வேட்டை, கொள்ளை, காமெடி என இந்தப் படம் பரபரப்பான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும்.

தமனின் துடிப்பான இசையும் சந்தீப் கிஷனின் திறமையான நடிப்பும் லைகாவின் பிரம்மாண்டமான தயாரிப்பும் நிச்சயம் மறக்க முடியாத படமாக மாற்றும். 95 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in